Thursday, 18 October 2012

மாற்றான் - எனர்ஜியான் குடிங்க..!!இந்தப்படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி மாற்றான் படத்தோட கதை இந்தப் படத்தோட காப்பி அந்தப் படத்தோட காப்பி, ஒரு நாவலின் கதைன்னு நெறைய பேரு சொன்னாங்க,ஆனா டைரக்டர் கே.வி ஆனந்த், அதெல்லாம் கிடையாதுப்பா மாற்றான் யார மாதிரியும் எது மாதிரியும் கிடையாது அவன் ஒரு புது மாதிரி,உண்மையிலையே மாற்றான்னு அடிச்சு சொன்னாரு. ஆனா படத்த பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியுது முன்னாடி சொன்ன மாதிரி எதாவது ஒரு படத்தோட காப்பியாவே இருந்திருக்கலாம்.ஏன்னா சில படத்துல அடுத்து அடுத்து என்ன ஆகும்னு பாக்குற ஆடியன்ஸ்க்கு தான் தெரியாம இருக்கும்,ஆனா இந்தப்படத்துல டைரக்டருக்கே தெரியாம பாவம் தவிச்சிருக்காரு.

படத்தோட கதை, அகிலன்-விமலன் சூர்யாக்களின் தந்தை திறமையா ஜெனிடிக் எஞ்சினியர் அவர் ஆரம்பிக்கும் ஒரு ஊட்டச்சத்து பவுடர் கம்பெனி 'எனர்ஜியான்'ல (Energion) எதோ கலப்படம் இருக்குறதா பலபேர் சொல்லியும் அத நிரூபிக்கமுடியல. அதோட பின் விளைவுகள தெரிஞ்சிகிட்டு, அப்பா தான் அதுக்கு காரணம்னு அவரை எதிர்க்குறாரு விமலன் சூர்யா. கலப்படத்துக்கான ஆதாரம் உள்ள pendrive விமலன் சூர்யாகிட்ட கிடைக்குது.அத பறிக்க சூர்யா அப்பா ஆள் அனுப்புறாரு அவங்களால விமலன் சூர்யா கொல்லப்படுறாரு.அப்புறம் என்ன இன்னொரு சூர்யா பழிவாங்குறது+உண்மையை கண்டு புடிக்கிறது போன்ற வேலைகள்ல களம் இறங்குறாரு.

ஒட்டிப் பிறந்த ரெட்டைப் பிறவிகள் கதைல சூர்யா எப்படி கலக்குறார்னு பாக்குறதுல ஒரு ஆசை. சூர்யாவும் அந்த நம்பிக்கைய மோசம் பண்ணாம (ப்ரியாமணி மாதிரியே) நல்லாவே நடிச்சிருக்காரு (அவரோட முந்தய படம் கேரக்ட்டர் ரெண்டு சேர்ந்து நடிச்ச மாதிரி இருந்துச்சு). அதுவும் முதல் பாதில மட்டும். ரெண்டாவது பாதில 'சிவகாமி கம்ப்யூட்டர்' தன் சித்து விளையாட்ட காட்டுன மாதிரி அவரோட மாமூலான கிளாஸ் எடுக்குற வேலைய இந்தியாவுல ஆரம்பிச்சு அப்படியே உக்§Åனியா போயி அங்கிருந்து அப்படியே குஜராத்ல முடிச்சு கடைசில ஜனாதிபதி விருதும் வாங்கிறாரு.(ரெண்டு வருஷத்துல ரெண்டு ஜனாதிபதி விருது, ஏழாம் அறிவிலும், மாற்றானிலும் பெற்ற ஒரே தமிழன்..!! அவர் இதுபோல பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன்). A.R.முருகதாஸும், K.V.ஆனந்தும் போட்டிப் போட்டு சூர்யாவுக்கு ஜனாதிபதி விருது வாங்கிக் கொடுத்திருக்காங்க. அப்புறம் வழக்கம் போல மொக்க காமெடி, சிக்ஸ் பேக் டூயட்,நெஞ்சுல குத்திக்கிட்டு சோகப்பாட்டு, ஸ்பெஷல் டயலாக் டெலிவரி ஸ்டைல், சண்டைனு அவரு வேலைய முடிச்சிட்டாரு. சிக்ஸ் பேக் வச்சிருந்தா சண்ட சீன்ல காட்டுனா பரவாயில்ல,எதுக்குய்யா பாட்டு சீன்ல சட்டைய கழட்டிப்போட்டு சுத்துறிங்க. இங்க பரவாயில்ல, அங்க ஹிந்தி படத்துல ஜான் ஆபிரகாம்னு ஒருத்தன் அடுத்த கட்டத்துக்கு போய்ட்டான், அதாவது ஜட்டியையும் பாதி கழட்டி விட்டு ஆடுறான். அது வரைக்கும் நம்ம சினிமா பரவாயில்ல.  

காஜல் அகர்வால்,படத்துல அழகா இருப்பாங்க ஆனா பாதி படத்துல அவங்க பேசுறதே புரியாது ஏன்னா சூர்யாவுக்கு அவங்கதான் 'கூகுள் ட்ரான்ஸ்லேட்டர்'. ரஷ்யன் மொழி பெயர்ôÀ¡ளர். சூர்யா^2 நடுவுல சிக்க வச்சிðடாங்க. ஒரு பெண் போலிஸ் காஜல் கிட்ட இவைங்கள என்ன ஆடித்தள்ளுபடில புடிச்சியானு கேப்பாங்க, அதுக்கு அர்த்தம் படத்தோடரெண்டாவது பாதில தெரியும். ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான இருக்காங்க அதுனால என்னனு முதல்ல ஒருத்தன லவ் பண்ணிட்டு அவன் போனதுக்கு அப்புறம் இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்குறாங்க. 'வாட் எ ப்ராக்டிகல் லவ் ஸ்டோரி'.அடுத்தது நம்ம ஹாரிஸ் ஜெயராஜ். அவர் பங்குக்கு வெயிட்ட காட்டிட்டாரு. அவரும் எத்தன படத்துல தான் புது ட்யூன் போடுற மாதிரி சமாளிப்பாரு பாவம். அதுவும் கடைசில ஒரு பேக்கிரவுண்டு மியூசிக் போடுவாரு பாருங்க.. கண்ணமாம்பேட்ட தரத்துல. ச்சே. வாய்ப்பே இல்ல. இந்த படத்துல கூட முந்தின படப் பாட்டு சாயல் இருந்துச்சு, இவரு அடுத்த படம் துப்பாக்கி தான் உச்சக்கட்டம். படம் அறுவையா இருந்து பாத்திருக்கோம் ஆனா பாட்டே அறுவையா இருக்குறத துப்பாக்கி படத்துல தான் அனுபவிச்சேன்.

முதல் பாதி கூட எதோ போயிருச்சு, படத்துல பல மொக்க இருந்தாலும் சில விஷயங்கள் நல்லா இருக்கு. எடிட்டிங்,கேமரா,தீம் பார்க் சண்டை,ரெட்டையர் கிளப் பாட்டு சீன் எல்லாம் சூப்பர். ஆனா எல்லாத்தையும் சேத்து ரெண்டாவது பாதில மொக்க பண்ணிட்டாங்க. சூர்யாவுக்கு ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளாண்ட் பண்ணது நமக்கு ஞாபகம் இருக்கு ஆனா அவரு மறந்துட்டு இங்கேயும் அங்கேயும் பறந்துகிட்டே இருக்காரு.  அப்பாதான் கொலைகாரர்னு தெரியிற சீன், கி¨Çமேக்ஸ் சீன்ல அப்பா கேரக்டர் வில்லத்தனமா(!!??) பேசுற டயலாக் எல்லாம் செம சப்பையா இருக்கு. எதோ ஏழாம் அறிவு படத்த கொஞ்சம் பட்டி டிங்கரிங் பாத்து வேற ட்ரஸ் போட்டு விட்டு மாற்றான்னு காட்டிட்டாங்க.   
 என் நண்பன் ஒருத்தன் சூர்யா ரசிகன் (படத்த first show பாத்தவன்) சொன்னான், "நண்பா நீ பாத்ததுல படத்துல நெறையா சீன் கட் பண்ணிடாங்க போல அதான் இப்படி சொல்றனு சொன்னான்'. நான் வடிவேலு கைப்புள்ள காமெடில வர அடி கொடுத்த கைபுள்ளைக்கே இந்த நிலமைனா அடி வாங்குனவன் உயிரோட இருப்பான்னு நெனைக்கிறியா நீயினு சொல்ற மாதிரி, நான் நினைச்சிகிட்டேன், அடப்பாவி நெறையா சீன் கட் பண்னத பாத்த எனக்கே இந்த நிலமைன்னா, முழுசா பாத்தவன் ஒழுங்கா வீடு போயி சேர்ந்திருப்பான்னு நெனைக்கிறியா நீயி.

படத்த முழுசா பாத்து முடிக்கனும்னா நீங்களும் எனர்ஜியா ஒரு லோட்டா குடிச்சிட்டு தான் போகனும்.எனர்ஜியான் குடிச்சா என்ன எபெக்ட்னு படத்துல பாத்துக்கோங்கோ..!!   

Sunday, 14 October 2012

'ரியல்' எஸ்டேட்- விளை(லை) நிலம்..!!

 நாங்க தங்கியிருந்த ரூம் பக்கத்துல ஒரு ஹோட்டல்ல வேலை பாத்த முருகேசன் அண்ணன பாத்தோம்.. ஆள் முன்னாடி பாத்ததை விட இப்பொ நல்லா 'டெவலப்' ஆயிருந்தாரு. அவருகிட்ட ஃப்ரெண்டு, 'என்னணே ஆளு 'வெயிட்' ஆயிட்டிங்க?? செம வசதியா"ன்னு கேட்டான். அவர், தம்பி நான் ரியல் எஸ்டேட் பண்ண ஆரம்பிச்சிட்டேன்பா, நல்லா போகுது அதான்னு அவரு சர்வர் வேலை to  ரியல் எஸ்டேட் அதிபர்(!!?) ஆன கதையை சொன்னாரு.  ஃப்ரெண்டு என்ட, 'நண்பா என்னடா சொல்றாரு இந்தாளு, ரியல் எஸ்டேட்ல அவ்ளோ வருமானமா வரும்? எதோ டகால்டி விட்றாண்டா நம்மகிட்ட' ன்னு சொன்னான்.

யோசனை தாங்க முடியாம அடுத்தநாள் அவர்கிட்டயே கேட்டோம் அவர் சொன்னதில் இருந்து ரியல் எஸ்டேட்ட பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சிச்சு.

உதாரணத்திற்கு ஒரு வீடு விலைக்கு வருதுனா அந்த வீட்டு ஓனர் அவரு தேவைக்கேற்ப, அப்புறம் வீட்டோட மதிப்பீடு, (அதாவது இடம் மற்றும் வீட்டோட வயசு 'building age' ) எல்லாத்தையும் கணக்கு பன்ணி அவரு லாபத்திற்க்கு விலைய fix பண்ணுவாரு. சுமார் 10 லட்சம்னு முடிவு பண்ணி அவருக்கு தெரிஞ்சவங்ககிட்டையும், தரகர்கள் கிட்டையும் சொல்லி வைக்கிறாரு.
வாங்க விருப்பப்படுறவங்க புரோக்கர் மூலமாகவோ இல்ல நேரடியா ஓனர் கிட்டையே பேசியோ வீட்ட முடிப்பாங்க.அப்புறம் புரோக்கர் ரெண்டு பக்கமும் கமிஷன் வாங்கிக்குவாரு. இதுதான் நடந்துச்சு இத்தனை நாளு. ஆனா இப்பொ எப்படினா , அந்த ஓனர் கிட்ட ஒரு ரியல் எஸ்டேட் காரர் போயி அந்த வீட்ட நான் முடிச்சிக்குறேன்னு சொல்லி ஒரு தொகைய அட்வான்ஸ் கொடுத்து ஒரு அக்ரிமெண்ட் (நாலு மாசத்துக்குள்ள முழு தொகைய கொடுப்பதாக ) போட்டு அந்த வீட்ட ப்ளாக் பண்ணி வச்சிருவாரு. இப்பொ அதே வீட்ட அந்த ரியல் எஸ்டேட் காரர் வெளிய 14 லட்சத்துல ஆரம்பிச்சு விலை பேச ஆர்ம்பிப்பாரு. பாக்க வர்றவங்க கிட்ட எடத்த பத்தி ஓஹோனு பேசி ஒத்துக்க வச்சி 10லட்ச ரூபாய் வீட்ட 13.5லட்சத்துக்கு முடிச்சிருவாரு. அதுல 10 லட்சத்த ஓனர்கிட்ட கொடுத்திட்டு வீட்டை வித்துருவாரு. ஆகமொத்தம் ரியல் எஸ்டேட்காரருக்கு முதலீடே இல்லாம 3.5 லட்சம் லாபம்.

ஆனால்.. 10 லட்ச ரூபாய் வீட்ட 13.5 லட்சத்துக்கு வாங்குனவர் மட்டும் இதுல பாதிக்கப்பட்டவர் இல்ல, இனிமே அந்த ஏரியாவுல எந்த இடத்துல யாரு வீடு வாங்குனாலும் அவங்க தலையிலும் இந்த பாரம் இறங்கும். சுருக்கமா சொன்னா 10 லட்ச ரூபாய் வீடு 11,12,னு ஏறாம ஒரே அடியா 15,16னு ஏறும். உண்மையான மதிப்பை விட பல மடங்கு அதிகமா விலை போகும். மக்கள் தேவை அதிகமா இருக்குறதால கிடைக்காம போயிருமோனு பயத்துல யோசிக்காம வாங்கிர்றாங்க.

வீடு இப்படின்னா, அடுத்த ப்ளாட்டு இதுக்கு மேல இருக்கு. முன்னாடி வருஷத்துக்கு வருஷம் விலை கூடுச்சுனா இப்பெல்லாம் மாசம் மாசம், இன்னும் சொல்லப்போனா வாரத்துக்கு வாரம் விலை கூடுது. போன மாசம்தான் ஒரு சென்ட் 5 லட்சம் சொன்னிங்க அதையே இந்த மாசம் 5.25 சொல்றிங்கனு கேட்டா, அதுபோன மாசம்,நான் சொல்றாது இந்த மாசம்னு டயலாக் விடுறாய்ங்க. அதுவும் அந்த எடம் உங்களுக்கு கொஞ்சம் புடிச்ச மாதிரி பேச்சோ இல்ல ரியாக்சன் விட்டிங்கனா போதும் அவ்ளோதான். பக்கத்துல டைடல் பார்க் வருது , ஜுராசிக் பார்க் வருதுனு டப்புனு 1 லட்சம் ஏத்திருவாய்ங்க. ஒரு இடம் அதோட மதிப்புப்படி 5 வருசத்துக்கு அப்புறம் ஏற வேண்டிய விலைய இப்பவே அந்த இடத்துக்கு கொடுத்து வாங்குனா என்ன ஆகும்.?? அந்த எடத்த 4 வருஷம் கழிச்சு பேங்க் லோன்க்கு அடகு வச்சா வாங்குன விலை கூட தர மாட்டாய்ங்க.

இது பத்தாதுனு இப்போ சிட்டி விரிவடைய விரிவடைய ஊருக்கு வெளிய இருக்குற விவசாய நிலத்த கம்மியான விலைக்கு வாங்கி அதையும் ப்ளாட் போட்டு வித்துர்றாய்ங்க. ஏற்கனவே பல விவசாய எடத்துல இப்போ கமர்சியல் பில்டிங் வந்தாச்சு. மீதி இருக்குற இடத்தையும் இப்படி கூரு போட்டு வித்துட்டா என்ன ஆகும்.?? ஏற்கனவே பக்கத்து மாநிலத்துக்காரன் கிட்ட தண்ணிக்கு தலைகீழ தண்ணி குடிக்க வேண்டியதா இருக்கு, போதாததுக்கு மழை வேற சதி பண்ணுது, இதுனாலையே பாதி விவசாயிங்க எடத்த வித்துட்டு பனியன் கம்பெனிக்கு வேளைக்கு போய்ட்டாங்க. இதே நிலமை தொடர்ந்துச்சுனா கொஞ்ச வருசத்துல சோத்துக்கே நாம அந்நிய நாடுகள் கிட்ட கை ஏந்துற நிலமை வரும். இப்போ நம்ம கண் முன்னாடியே இந்த நாலு வருசத்துல எவ்வளவோ விளை நிலங்கள் கட்டிடங்களாக மாறிட்டு இருக்கு. இது இன்னும் வேகமா தொடர்ந்தா இந்தியாவின் முதுகெழும்பான விவசாயம் மோசமானா, நாட்டோட நிலமை ரொம்ப ஆபத்தானதா ஆயிரும்.

ஏற்கனவே ஒரு பக்கம் மழை இல்ல, விளைச்சல் இல்ல, மோட்டர் போட கரெண்ட் இல்ல, விவசாயம் செய்ய ஆள் கிடைக்கலன்னு ஆயிரம் பிரச்சனை இருக்கு இதுல இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயம் பண்ண நிலமும் இல்லாம போயிரும் போல.இந்த பிரச்சனையை உடனடியா எதாவது முயற்சி எடுத்து தடுத்து நிறுத்தனும். இல்லைன்னா வடிவேலு ஒரு படத்துல, ஐயா, என் கிணத்த காணோம்ன்னு கம்ப்ளேய்ண்ட் கொடுக்குற மாதிரி ஒரு நாள் நிஜமாவே இந்த நிலமை வரலாம்.(எனக்கு தோன்றிய தடுப்பு வழி - விளை நிலங்களை விற்க நேரிடும் போது அந்த நிலத்தை அரசே கையகப்படுத்தி அந்த நிலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் உதவியுடன் அரசே விவசாயம் செய்யலாம். அல்லது வருமையின் காரணமாக விற்க நேரிடும் போது அந்த நிலத்தில் விவசாயத்திற்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டு அந்த நிலத்தின் உரிமயாளர் ஒரு விவசாயியாக  இருந்தால் அவரையே விவசாயம் செய்ய சொல்லலாம். விளைச்சளில் அவருக்கும் குறிப்பிட்ட பங்கு அளிக்கலாம். இது எனக்கு தோன்றிய வழிகளே.எதில் ஏதும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விசயம் இருந்தால் அல்லது மாற்று கருத்து இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.)      
         


Wednesday, 3 October 2012

தாண்டவம்- விக்ரமின் திருட்டுப்பய சகவாசம்
எந்த படத்துக்கு விமர்சனம் எழுதனும்னாலும் அந்த படத்த பாத்துட்டு தான் எழுத முடியும். ஆனா தாண்டவம் படத்துக்கு விமர்சனம் எழுதனும்னா மட்டும் நீங்க இதுவரைக்கும் தமிழ் சினிமால வழக்கமான பழிவாங்குற கதை படங்கள பாத்திருந்தா போதும். கொஞ்சம் கூட பட்டி டின்கரிங் வேலை பாக்காம அப்படியே அடிச்சி கலக்கி விட்ருக்காரு இயக்குனர் விஜய்..!! படம் ஆரம்பிக்கிற மொத சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் சலைக்காம (மத்த படத்த) பாத்து பாத்து எடுத்திருக்காரு. படம் ரிலீஸ்க்கு முன்னாடி விக்ரம் ஒரு பேட்டி கொடுத்தாரு,"விஜய் இந்த படத்துக்காக 200% உழைப்பை கொடுத்திருக்காரு"னு, அதுக்கு அர்த்தம் படம் பாக்கும் போது தான் தெரியுது. ஆமா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம எத்தன படத்துல முடியுமோ அத்தன படத்துல இருந்து சுட்டா.. கடின உழைப்புதான்.

வழக்கம் போல ஹீரோ போலிஸ், அதே ஆபிஸ்ல அதே டேபிள்ல உக்காந்திருக்கிற ஒரு போலிஸ் ப்ரெண்டு, இவன் உயிர அவன் காபாத்த, அவன் உயிர இவன் காப்பாத்தனு ஆரம்பிச்சு அப்படியே கிராமத்துக்கு புடிக்காத கல்யாணத்துக்கு போயி, பொண்ண பாத்தவுடன சைலண்ட்டா தாலிய கட்டி,அங்கிருந்து டில்லிக்கு போயி அங்க ஒரு மொக்கைய போட்டு, சொய்ங்ங்னு லண்டன் போய் லாண்ட் ஆகுது கதை. சரி அங்கயாச்சும் எதாவது புதுசா இருக்கானு பாத்தா அங்கேயும் அதே பழைய சோறு தான். சுருக்கமா சொல்லப்போனா அர்ஜுன் படத்துல ஆரம்பிச்சு நேரா மௌன ராகம் பக்கம் போயிட்டு அப்படியே ஒரு U-turn போட்டு 'கஜினி'ல வந்து நின்னாரு பாருங்க.. ச்ச.. வாய்ப்பே இல்ல. அப்படியொரு உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது.


படத்துல விக்ரம்ம பாத்தா பரிதாபமா இருக்கு. எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டரு. பாவம் அவர சொல்லி என்ன செய்ய. சேர்க்கை சரியில்ல. ஜக்பதி பாபு, இந்த படத்துக்கு நான் போனதுக்கு முக்கிய காரணத்துல இவரும் ஒருத்தர். ஆனா கடைசில அவரையும் மொக்கையா ஆக்கிட்டாய்ங்க. so sad. விக்ரம் காப்பாத்துறதுக்குனே அவரு மாட்டிக்கிறதும், பழைய மொக்க டயலாக் பேசவும்தான் அவர படத்துல நடிக்க வச்சிருக்கய்ங்க போல. படத்துல ஒரே ஆறுதல் மூனு ஹீரோயின். முதல் நாப்பது நிமிஷம் எமி ஜாக்சன், அடுத்த நாப்பது நிமிஷம் அனுஷ்கா அப்புறம் ஒரு இருபது நிமிஷம் லக்ஷ்மி ராய், மறுபடியும் ஒரு இருபது நிமிஷம் எமி. எனக்கென்னமோ தியேட்டர்ல படம் முடியிற வரைக்கும் நிரைய பேரு உக்காந்து இருந்ததுக்கு இதுதான் முக்கிய காரணம் போல. (படத்துல பாக்குற மாதிரி இருந்ததும் அது மட்டும் தான்). எல்லத்துக்கும் மேல கல்யாணம் பண்ணிக்க போறவங்கள பத்தி ஒன்னுமே தெரியாம இருப்பாங்களாம்.இதவிட உச்சக்கட்டம் டெல்லில கண் டாக்டர் அனுஷ்கா,ஆனா விக்ரம் ஆபிஸ் போற விதத்த பாத்தும் எஸ்.ஐ னு நெனைக்குறாங்களாம். ஏண்டா டில்லி எஸ்.ஐ னா மட்டும் கோட்,டை கட்டிட்டு டொயோட்டோ பார்ச்சுனர் கார்ல போவாங்களா?? இதுல "லஞ்சம் வாங்குவாரு போல"னு லாஜிக் டயலாக் வேற கேடு.

பாட்டு அதுக்கு மேல, தெய்வத்திருமகள் படத்துல பட்டைய கிளப்புன ஜி.வி.பிரகாஷ் இதுல செம அருவை. பேக்கிரவுண்டுல திடீர்னு தலைவர் கவுண்டர் அடி வாங்குன மாதிரி 'கொய்ங்ங்ங்ங்னு' ஒரு சத்தம், கேட்டா பாம் வெடிச்ச எபெக்ட் தர்றாய்ங்களாம்.காது சவ்வு அந்துருச்சு.


விக்ரம் அடிக்கடி புறா மாதிரி வாய்ல டொக்..டொக்னு சவுண்டு விட்டுகிட்டே கழுத்த சாய்ச்சு  பாக்குறாரு..நல்ல வேலை அதுக்கு மட்டும் Daniel Kish வச்சு ஒரு விளக்கம் தர்றது நல்லா இருந்துச்சு.அதுலயும் நாசர் முந்திகிட்டு உள்ள புகுந்து 'இவிகளுக்கு கண்ணு தெரியாது'னு கூகுள்ல பாத்து கண்டுபுடிச்சி சொல்றாரு. நாசர் 'வீரக்கத்தி'யா வந்து கடைசில அவரும் மொன்ன கத்தியா ஆயிட்டாரு. அடுத்து சந்தானம், பாவம் அவரும் எவ்ளோ நேரம் தான் தனியா போராடுவாரு. ஓப்பனிங் நல்லா இருந்துச்சு ஆனா பினிசிங் சரியில்லயேப்பா..!!   


படத்துல நல்லா இருந்தது விக்ரம் கண்ணுத் தெரியாம போடுற சண்டையும், ரெண்டு காமெடி மட்டும்தான்.அதுகூட இப்போ என்னானு மறந்து போச்சு. படம் மொக்கையா இருக்குறது சகஜம் தான் ஏன் சூப்பர் ஸ்டார் கூட 'பாபா' மொக்கைய போட்டாரு.ஆனா அது புது மொக்க.இது

எல்லா படத்துலையும் இருந்து உருவி எடுத்து போட்ட மொக்க. இந்த     படத்த கூட பாத்துரலாம் போல ஆனா இவைங்க எல்லாரும் சேர்ந்து 'டிவி'ல கொடுக்குற பேட்டி இருக்கே..அததான் தாங்கிக்க முடியல..கொய்யால என்னமோ சொந்தமா யோசிச்சு படம் எடுத்த மாதிரி அவ்ளோ பீலா விடுறாய்ங்க. மனசாட்சியே இல்லையாடா உங்களுக்கு..    
   
சுருக்கமா சொல்லனும்னா பழைய துணியெல்லாம் சேர்த்து தச்ச மிதியடி தான் இந்த படம்.!! தாண்டவம். தியேட்டர்க்குள் நுழையாமல் அப்படியே தாண்டவும்.      
         தில் இருந்தா போய் பாருங்க.