நாங்க தங்கியிருந்த ரூம் பக்கத்துல ஒரு ஹோட்டல்ல வேலை பாத்த முருகேசன் அண்ணன பாத்தோம்.. ஆள் முன்னாடி பாத்ததை விட இப்பொ நல்லா 'டெவலப்' ஆயிருந்தாரு. அவருகிட்ட ஃப்ரெண்டு, 'என்னணே ஆளு 'வெயிட்' ஆயிட்டிங்க?? செம வசதியா"ன்னு கேட்டான். அவர், தம்பி நான் ரியல் எஸ்டேட் பண்ண ஆரம்பிச்சிட்டேன்பா, நல்லா போகுது அதான்னு அவரு சர்வர் வேலை to ரியல் எஸ்டேட் அதிபர்(!!?) ஆன கதையை சொன்னாரு. ஃப்ரெண்டு என்ட, 'நண்பா என்னடா சொல்றாரு இந்தாளு, ரியல் எஸ்டேட்ல அவ்ளோ வருமானமா வரும்? எதோ டகால்டி விட்றாண்டா நம்மகிட்ட' ன்னு சொன்னான்.
யோசனை தாங்க முடியாம அடுத்தநாள் அவர்கிட்டயே கேட்டோம் அவர் சொன்னதில் இருந்து ரியல் எஸ்டேட்ட பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சிச்சு.
உதாரணத்திற்கு ஒரு வீடு விலைக்கு வருதுனா அந்த வீட்டு ஓனர் அவரு தேவைக்கேற்ப, அப்புறம் வீட்டோட மதிப்பீடு, (அதாவது இடம் மற்றும் வீட்டோட வயசு 'building age' ) எல்லாத்தையும் கணக்கு பன்ணி அவரு லாபத்திற்க்கு விலைய fix பண்ணுவாரு. சுமார் 10 லட்சம்னு முடிவு பண்ணி அவருக்கு தெரிஞ்சவங்ககிட்டையும், தரகர்கள் கிட்டையும் சொல்லி வைக்கிறாரு.
வாங்க விருப்பப்படுறவங்க புரோக்கர் மூலமாகவோ இல்ல நேரடியா ஓனர் கிட்டையே பேசியோ வீட்ட முடிப்பாங்க.அப்புறம் புரோக்கர் ரெண்டு பக்கமும் கமிஷன் வாங்கிக்குவாரு. இதுதான் நடந்துச்சு இத்தனை நாளு. ஆனா இப்பொ எப்படினா , அந்த ஓனர் கிட்ட ஒரு ரியல் எஸ்டேட் காரர் போயி அந்த வீட்ட நான் முடிச்சிக்குறேன்னு சொல்லி ஒரு தொகைய அட்வான்ஸ் கொடுத்து ஒரு அக்ரிமெண்ட் (நாலு மாசத்துக்குள்ள முழு தொகைய கொடுப்பதாக ) போட்டு அந்த வீட்ட ப்ளாக் பண்ணி வச்சிருவாரு. இப்பொ அதே வீட்ட அந்த ரியல் எஸ்டேட் காரர் வெளிய 14 லட்சத்துல ஆரம்பிச்சு விலை பேச ஆர்ம்பிப்பாரு. பாக்க வர்றவங்க கிட்ட எடத்த பத்தி ஓஹோனு பேசி ஒத்துக்க வச்சி 10லட்ச ரூபாய் வீட்ட 13.5லட்சத்துக்கு முடிச்சிருவாரு. அதுல 10 லட்சத்த ஓனர்கிட்ட கொடுத்திட்டு வீட்டை வித்துருவாரு. ஆகமொத்தம் ரியல் எஸ்டேட்காரருக்கு முதலீடே இல்லாம 3.5 லட்சம் லாபம்.
ஆனால்.. 10 லட்ச ரூபாய் வீட்ட 13.5 லட்சத்துக்கு வாங்குனவர் மட்டும் இதுல பாதிக்கப்பட்டவர் இல்ல, இனிமே அந்த ஏரியாவுல எந்த இடத்துல யாரு வீடு வாங்குனாலும் அவங்க தலையிலும் இந்த பாரம் இறங்கும். சுருக்கமா சொன்னா 10 லட்ச ரூபாய் வீடு 11,12,னு ஏறாம ஒரே அடியா 15,16னு ஏறும். உண்மையான மதிப்பை விட பல மடங்கு அதிகமா விலை போகும். மக்கள் தேவை அதிகமா இருக்குறதால கிடைக்காம போயிருமோனு பயத்துல யோசிக்காம வாங்கிர்றாங்க.
வீடு இப்படின்னா, அடுத்த ப்ளாட்டு இதுக்கு மேல இருக்கு. முன்னாடி வருஷத்துக்கு வருஷம் விலை கூடுச்சுனா இப்பெல்லாம் மாசம் மாசம், இன்னும் சொல்லப்போனா வாரத்துக்கு வாரம் விலை கூடுது. போன மாசம்தான் ஒரு சென்ட் 5 லட்சம் சொன்னிங்க அதையே இந்த மாசம் 5.25 சொல்றிங்கனு கேட்டா, அதுபோன மாசம்,நான் சொல்றாது இந்த மாசம்னு டயலாக் விடுறாய்ங்க. அதுவும் அந்த எடம் உங்களுக்கு கொஞ்சம் புடிச்ச மாதிரி பேச்சோ இல்ல ரியாக்சன் விட்டிங்கனா போதும் அவ்ளோதான். பக்கத்துல டைடல் பார்க் வருது , ஜுராசிக் பார்க் வருதுனு டப்புனு 1 லட்சம் ஏத்திருவாய்ங்க. ஒரு இடம் அதோட மதிப்புப்படி 5 வருசத்துக்கு அப்புறம் ஏற வேண்டிய விலைய இப்பவே அந்த இடத்துக்கு கொடுத்து வாங்குனா என்ன ஆகும்.?? அந்த எடத்த 4 வருஷம் கழிச்சு பேங்க் லோன்க்கு அடகு வச்சா வாங்குன விலை கூட தர மாட்டாய்ங்க.
இது பத்தாதுனு இப்போ சிட்டி விரிவடைய விரிவடைய ஊருக்கு வெளிய இருக்குற விவசாய நிலத்த கம்மியான விலைக்கு வாங்கி அதையும் ப்ளாட் போட்டு வித்துர்றாய்ங்க. ஏற்கனவே பல விவசாய எடத்துல இப்போ கமர்சியல் பில்டிங் வந்தாச்சு. மீதி இருக்குற இடத்தையும் இப்படி கூரு போட்டு வித்துட்டா என்ன ஆகும்.?? ஏற்கனவே பக்கத்து மாநிலத்துக்காரன் கிட்ட தண்ணிக்கு தலைகீழ தண்ணி குடிக்க வேண்டியதா இருக்கு, போதாததுக்கு மழை வேற சதி பண்ணுது, இதுனாலையே பாதி விவசாயிங்க எடத்த வித்துட்டு பனியன் கம்பெனிக்கு வேளைக்கு போய்ட்டாங்க. இதே நிலமை தொடர்ந்துச்சுனா கொஞ்ச வருசத்துல சோத்துக்கே நாம அந்நிய நாடுகள் கிட்ட கை ஏந்துற நிலமை வரும். இப்போ நம்ம கண் முன்னாடியே இந்த நாலு வருசத்துல எவ்வளவோ விளை நிலங்கள் கட்டிடங்களாக மாறிட்டு இருக்கு. இது இன்னும் வேகமா தொடர்ந்தா இந்தியாவின் முதுகெழும்பான விவசாயம் மோசமானா, நாட்டோட நிலமை ரொம்ப ஆபத்தானதா ஆயிரும்.
ஏற்கனவே ஒரு பக்கம் மழை இல்ல, விளைச்சல் இல்ல, மோட்டர் போட கரெண்ட் இல்ல, விவசாயம் செய்ய ஆள் கிடைக்கலன்னு ஆயிரம் பிரச்சனை இருக்கு இதுல இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயம் பண்ண நிலமும் இல்லாம போயிரும் போல.இந்த பிரச்சனையை உடனடியா எதாவது முயற்சி எடுத்து தடுத்து நிறுத்தனும். இல்லைன்னா வடிவேலு ஒரு படத்துல, ஐயா, என் கிணத்த காணோம்ன்னு கம்ப்ளேய்ண்ட் கொடுக்குற மாதிரி ஒரு நாள் நிஜமாவே இந்த நிலமை வரலாம்.
(எனக்கு தோன்றிய தடுப்பு வழி - விளை நிலங்களை விற்க நேரிடும் போது அந்த நிலத்தை அரசே கையகப்படுத்தி அந்த நிலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் உதவியுடன் அரசே விவசாயம் செய்யலாம். அல்லது வருமையின் காரணமாக விற்க நேரிடும் போது அந்த நிலத்தில் விவசாயத்திற்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டு அந்த நிலத்தின் உரிமயாளர் ஒரு விவசாயியாக இருந்தால் அவரையே விவசாயம் செய்ய சொல்லலாம். விளைச்சளில் அவருக்கும் குறிப்பிட்ட பங்கு அளிக்கலாம். இது எனக்கு தோன்றிய வழிகளே.எதில் ஏதும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விசயம் இருந்தால் அல்லது மாற்று கருத்து இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.)
நல்ல பதிவு! தொடர்க!
ReplyDeleteWell written Ilango...super
ReplyDelete