
வழக்கம் போல ஹீரோ போலிஸ், அதே ஆபிஸ்ல அதே டேபிள்ல உக்காந்திருக்கிற ஒரு போலிஸ் ப்ரெண்டு, இவன் உயிர அவன் காபாத்த, அவன் உயிர இவன் காப்பாத்தனு ஆரம்பிச்சு அப்படியே கிராமத்துக்கு புடிக்காத கல்யாணத்துக்கு போயி, பொண்ண பாத்தவுடன சைலண்ட்டா தாலிய கட்டி,அங்கிருந்து டில்லிக்கு போயி அங்க ஒரு மொக்கைய போட்டு, சொய்ங்ங்னு லண்டன் போய் லாண்ட் ஆகுது கதை. சரி அங்கயாச்சும் எதாவது புதுசா இருக்கானு பாத்தா அங்கேயும் அதே பழைய சோறு தான். சுருக்கமா சொல்லப்போனா அர்ஜுன் படத்துல ஆரம்பிச்சு நேரா மௌன ராகம் பக்கம் போயிட்டு அப்படியே ஒரு U-turn போட்டு 'கஜினி'ல வந்து நின்னாரு பாருங்க.. ச்ச.. வாய்ப்பே இல்ல. அப்படியொரு உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது.

படத்துல விக்ரம்ம பாத்தா பரிதாபமா இருக்கு. எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டரு. பாவம் அவர சொல்லி என்ன செய்ய. சேர்க்கை சரியில்ல. ஜக்பதி பாபு, இந்த படத்துக்கு நான் போனதுக்கு முக்கிய காரணத்துல இவரும் ஒருத்தர். ஆனா கடைசில அவரையும் மொக்கையா ஆக்கிட்டாய்ங்க. so sad. விக்ரம் காப்பாத்துறதுக்குனே அவரு மாட்டிக்கிறதும், பழைய மொக்க டயலாக் பேசவும்தான் அவர படத்துல நடிக்க வச்சிருக்கய்ங்க போல. படத்துல ஒரே ஆறுதல் மூனு ஹீரோயின். முதல் நாப்பது நிமிஷம் எமி ஜாக்சன், அடுத்த நாப்பது நிமிஷம் அனுஷ்கா அப்புறம் ஒரு இருபது நிமிஷம் லக்ஷ்மி ராய், மறுபடியும் ஒரு இருபது நிமிஷம் எமி. எனக்கென்னமோ தியேட்டர்ல படம் முடியிற வரைக்கும் நிரைய பேரு உக்காந்து இருந்ததுக்கு இதுதான் முக்கிய காரணம் போல. (படத்துல பாக்குற மாதிரி இருந்ததும் அது மட்டும் தான்). எல்லத்துக்கும் மேல கல்யாணம் பண்ணிக்க போறவங்கள பத்தி ஒன்னுமே தெரியாம இருப்பாங்களாம்.இதவிட உச்சக்கட்டம் டெல்லில கண் டாக்டர் அனுஷ்கா,ஆனா விக்ரம் ஆபிஸ் போற விதத்த பாத்தும் எஸ்.ஐ னு நெனைக்குறாங்களாம். ஏண்டா டில்லி எஸ்.ஐ னா மட்டும் கோட்,டை கட்டிட்டு டொயோட்டோ பார்ச்சுனர் கார்ல போவாங்களா?? இதுல "லஞ்சம் வாங்குவாரு போல"னு லாஜிக் டயலாக் வேற கேடு.
பாட்டு அதுக்கு மேல, தெய்வத்திருமகள் படத்துல பட்டைய கிளப்புன ஜி.வி.பிரகாஷ் இதுல செம அருவை. பேக்கிரவுண்டுல திடீர்னு தலைவர் கவுண்டர் அடி வாங்குன மாதிரி 'கொய்ங்ங்ங்ங்னு' ஒரு சத்தம், கேட்டா பாம் வெடிச்ச எபெக்ட் தர்றாய்ங்களாம்.காது சவ்வு அந்துருச்சு.
விக்ரம் அடிக்கடி புறா மாதிரி வாய்ல டொக்..டொக்னு சவுண்டு விட்டுகிட்டே கழுத்த சாய்ச்சு பாக்குறாரு..நல்ல வேலை அதுக்கு மட்டும் Daniel Kish வச்சு ஒரு விளக்கம் தர்றது நல்லா இருந்துச்சு.அதுலயும் நாசர் முந்திகிட்டு உள்ள புகுந்து 'இவிகளுக்கு கண்ணு தெரியாது'னு கூகுள்ல பாத்து கண்டுபுடிச்சி சொல்றாரு. நாசர் 'வீரக்கத்தி'யா வந்து கடைசில அவரும் மொன்ன கத்தியா ஆயிட்டாரு. அடுத்து சந்தானம், பாவம் அவரும் எவ்ளோ நேரம் தான் தனியா போராடுவாரு. ஓப்பனிங் நல்லா இருந்துச்சு ஆனா பினிசிங் சரியில்லயேப்பா..!!
படத்துல நல்லா இருந்தது விக்ரம் கண்ணுத் தெரியாம போடுற சண்டையும், ரெண்டு காமெடி மட்டும்தான்.அதுகூட இப்போ என்னானு மறந்து போச்சு. படம் மொக்கையா இருக்குறது சகஜம் தான் ஏன் சூப்பர் ஸ்டார் கூட 'பாபா' மொக்கைய போட்டாரு.ஆனா அது புது மொக்க.இது
எல்லா படத்துலையும் இருந்து உருவி எடுத்து போட்ட மொக்க. இந்த படத்த கூட பாத்துரலாம் போல ஆனா இவைங்க எல்லாரும் சேர்ந்து 'டிவி'ல கொடுக்குற பேட்டி இருக்கே..அததான் தாங்கிக்க முடியல..கொய்யால என்னமோ சொந்தமா யோசிச்சு படம் எடுத்த மாதிரி அவ்ளோ பீலா விடுறாய்ங்க. மனசாட்சியே இல்லையாடா உங்களுக்கு..
சுருக்கமா சொல்லனும்னா பழைய துணியெல்லாம் சேர்த்து தச்ச மிதியடி தான் இந்த படம்.!! தாண்டவம். தியேட்டர்க்குள் நுழையாமல் அப்படியே தாண்டவும்.
தில் இருந்தா போய் பாருங்க.
நாசர் 'வீரக்கத்தி'யா வந்து கடைசில அவரும் மொன்ன கத்தியா ஆயிட்டாரு....
ReplyDeleteஹா ஹா.. அருமையா... ஒரு அட்டகத்தி இளைஞனின் அற்புதாமான விமர்சனம்.... :-)))
கலக்கிட்ட தம்பி
ReplyDelete//சுருக்கமா சொல்லனும்னா பழைய துணியெல்லாம் சேர்த்து தச்ச மிதியடி தான் இந்த படம்.!! தாண்டவம். தியேட்டர்க்குள் நுழையாமல் அப்படியே தாண்டவும். //
ReplyDeletehahaahhahahahhahaha.... thaaru maaru :)