Tuesday 18 September 2012

உலகப்போராளி சைமன் ஆவேசப் பேட்டி!



நம் தொலைக்காட்சிப் பேட்டிக்கு தன் தம்பி படையுடன் வந்து இறங்கினார் சைமான்.  யாருமே இல்லாத இடத்தில் தங்களை தாங்களே தள்ளிக்கொண்டு.. ஹேய்.தள்ளு.தள்ளு.அண்ணனுக்கு வழிவிடு.. ஹேய் தள்ளு தள்ளு என்று அலப்பறையுடன் வந்து பேட்டி எடுக்கப்படும் அரங்கில் வந்து அமர்ந்தனர்.

தொகுப்பாளர்: சார். எதோ படை வருவாங்கனு சொன்னிங்க, மூணே முக்கால் பேருதான் வந்திருக்காங்க, மீதி எல்லாரும் எப்பொ சார் வருவாங்க? நேரம் ஆச்சு, நிகழ்ச்சிய ஆரம்பிக்கனும்.

சைமான் : பிரிஞ்சு பிரிஞ்சு வர்றதுக்கு என் தம்பிகளை சிங்களப் படைனு நெனச்சிங்களா?? தமில் உணர்வும், வீரமும், மானமும், வேகமும் கொட்டிக்கிடக்கும் இளைஞர் படை. மொத்தமா தான் வந்திருக்காங்க. ஃபேக் ப்ரொஃபைலையெல்லாம் (fake profile) வீட்டுலயே வச்சுட்டு வந்திருக்குறதுனால கூட்டம் குறைவா இருக்கு. நீங்க
ஆரம்பிங்க.

(தொகுப்பாளர் கடுப்புடன் நிகழ்ச்சியை தொடங்குகிறார்.)

நேயர்களே.. இன்று நம் குறுக்குக்கு குறுக்கு நிகழ்ச்சிக்கு ஒரு 'முக்கிய' பிரமுகர் வந்திருக்கிறார். அவர் ஹாலிவுட் சூப்பர்மான், ஸ்பைடர்மான், ஹீமான், ஏன் நம்ம ஊரு அனுமான் வரிசையில் உலக தமிழர்களை காக்க போராடும் சைமான் அவர்கள். திரளான(!!??) தன் தம்பி படையுடன் வந்திருக்கிறார். வாருங்கள் சைமான் அவர்களே. வணக்கம். முதல் கேள்வி என்னன்னா... (சைமான் இடைமறிக்கிறார்)

சைமன்: ஏய் இருப்பா இருப்பா.. டேய் அந்த வாட்டர் பாட்டிலை எடுங்கடா... (பாட்டிலை திறந்து தலையில் ஊற்றிக்கொண்டு தொடர்கிறார்) உலகெங்கும் உள்ள தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மொழிபேசும் ஈழத்தமிழர்களுக்கும் வணக்கம்.
இப்ப சொல்லுப்பா..

தொகுப்பாளர்: (??!!).. சார் முதலில் உங்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காரணம், கொள்கை அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க.

சைமான்: பெரியார் திக, விடுதலை சிறுத்தைகள் மேடைகளிலே பேசிப் பேசிப் போர் அடித்த போது என் தமிழ்த்தம்பி ஒருவன் " 'ஓசி' மேடையிலேயே 'ஓபி' அடிக்கிறோமே, நமக்கென்று ஒரு மேடை வேண்டாமா அண்ணா?" என்று கண்ணீருடன் கேட்டான். அவனுக்கு நான் என்ன பதில் சொல்வது? அந்த தம்பிக்காக நான் அமைத்த மேடைதான் நாம் டம்ளர் கட்சி. கொள்கை என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. கொள்கை இல்லாமலேயே கடைசி வரை இருக்க வேண்டும், வேலைவெட்டி இல்லாமலே நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். அதான் எங்கள் கொள்கையே.

தொகுப்பாளர்: தமிழ்நாட்டில் உள்ள பிரதான இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து உங்களால் வெற்றி பெற முடியும் என எப்படி நம்புகிறீர்கள்?

சைமான்: ஏன் முடியாது? ஏன் சார் முடியாது? 1928லே ஜவஹர்லால் நேரு தலைமையில் ஆப்ரிக்காவிலே ஆட்சியைப் பிடித்ததே காங்கிரஸ், அது நடக்கும்போது இது ஏன் சார் நடக்காது? இதுவரை வேண்டுமானால் நீங்கள் சொன்ன கட்சிகள் ஆண்டிருக்கலாம். ஆனால் வரும் 2029இல் பிப்ரவ்ரி 30ஆம் நாள் டமிலகத்தில் எங்கள் ஆட்சிதான். அது மட்டுமல்ல இலங்கை, ஐரோப்பா, திருச்சி, அண்ணாநகர் என உலகெங்கும் எங்கள் ஆட்சிதான்.
(சைமனின் தம்பிகள் ஆராவாரம் செய்கிறார்கள், " முரட்டு முதல்வர் சைமன் வாழ்க.!! அண்ணனின் தம்பி சைமன் வாழ்க..!! தம்பிகளின் அண்ணன் சைமன் வாழ்க..! ஒன்று விட்ட சித்தப்பாவின் மைத்துனர் சைமன் வாழ்க..!!")

(சைமான் பெருமிதத்தோடு கையசைத்து அமைதிபடுத்துகிறார்)

தொகுப்பாளர்: மூணே முக்கால் தம்பிகளை வைத்துக்கொண்டு எப்படி சார் ஆட்சி அமைப்பீர்கள்?

சைமான்: என்னுடன் தோள் கொடுத்து நிற்பவன் எல்லாம் உண்மை உணர்வாளர்கள். என்னுடைய படை பள்ளியில் உருவாகிக்கொண்டிருக்கிறது. எங்கள் கட்சி பொதுப்பணித்துறை அமைச்சர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு C sectionல் படிக்கிறார். அதே போல எங்கள் கட்சி மாநில செயலாளர் மதுரை அரசு மருத்துவமனையில் இப்போதுதான் பிறந்திருக்கிறார். இதே போல இன்னும் எத்தனையோ தம்பி படைகள் டமிலகமெங்கும் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளிலும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

தொகுப்பாளர்: தமிழ்நாட்டில் தமிழர்களின் இன்றைய நிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சைமான்: ( முகத்தை சுருக்கி..மேலும் கீழும் பார்த்து, பெருமூச்சு விடுகிறார்..)

தொகுப்பாளர்: சொல்லுங்க சார். காமிரா ஆன்ல இருக்கு. நேயர்கள் எல்லாம் பார்த்துட்டு இருக்காங்க.

சைமான்: அது வந்து.. ப..ப..வ..வ.. அது வந்து.... ஹ்ம்ம்ஹ்ம்ம்... காமிராவ ஆஃப் பண்ணுப்பா... (பாத்ரூம் வராத குழந்தையை போல முகத்தை வைத்துக்கொள்கிறார்)

தொகுப்பாளர்: (தம்பி ஒருவரிடம் மெதுவாக) ஏன் அண்ணே முக்குறாரு? பாத்ரூம் வெளிய தான் இருக்கு வேனும்னா அவர போய்ட்டு வர சொல்லுங்க.

தம்பி : யோவ்.. எங்க அண்ணனை என்ன நினைச்ச..? அண்ணனுக்கு இந்த கேள்வினாலே அலர்ஜி. தமிழ்நாடு விசயமெல்லாம் அவருக்கு 'அவுட் ஆஃப் சிலபஸ்'னு தெரியாதாய்யா உனக்கு?

சைமான் (திடீரென தன்னையே மறந்து): என்னத்த சொல்ல இங்கே நடந்துகொண்டிருப்பது ஆட்சியே இல்லை. அப்படிப்பட்ட மிக மோச.... (தம்பி குறுக்கிட்டு, "அண்ணே வார்த்தை தடிக்குது.. கவனம் கவனம்.)

சீமான்: (எச்சியை முழுங்கிக்கொண்டு).. அதாவது இது தமிழ்நாட்டில் நடக்க வேண்டிய ஆட்சியே இல்லை. உலக மக்களை காக்கும் திறன் கொண்ட அருமையான ஆட்சி. ஈழத்தாய் அருளால், பாசத்தால், அரவணைப்பால், உலக தமிழர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.

//கரண்ட் கட் ஆகிறது//

சைமன்: பார்த்தீர்களா ஒரவுஹலே.. நம் பேட்டியை வெளிய தெரிய விடாமல் செய்வதற்காக திமுக செய்யும் சதி இது. இது அடக்குமுறை இல்லையா, கொடுங்கோல் தனம் இல்லையா?? அடாவடித்தனம் இல்லையா??

தொகுப்பாளர்: சார்..என்ன சொல்றிங்க? இப்போ ஆட்சியில் இருப்பது அதிமுக. மின்தடைக்கு காரணமும் அவர்கள் தான் நீங்கள் ஏன் திமுகவை குறை சொல்றிங்க?

சைமன்: ஓ அப்படியா? (இதெல்லாம் சொல்றதில்லையாப்பா? என்று தம்பியைப் பார்த்து திட்டுகிறார்.)

தொகுப்பாளர்: ஓட்டுப்போடலேனா வெட்டுவேன் குத்துவேன்னு சொன்னீங்களாமே?

சைமன்: ஆமாம். சொன்னேன். எனக்கு உரிமையில்லையா? இதெல்லாம் என்ன பெருமையா.. கடமை...

தொகுப்பாளர்: (மனதிற்குள், "சம்பந்தம் இல்லாம பேசுறானே!!") சார். ஏன் சார் எந்த தேர்தலிலும் நிக்க மாட்டேங்குறீங்க?

சைமன்: என்ன தம்பி நீ? புத்திசாலினு நினைச்சா முட்டாளா இருக்கியே.. என் கட்சியினர் எல்லாம் ஸ்கூல்ல படிக்கிறாங்க, ஆஸ்பத்திரில இப்பதான் பிறந்திருக்காங்க அவங்களுக்கு எப்படி ஓட்டு இருக்கும்? என்னப்பா நீ கிறுக்கனா இருக்கியே!! ஹாஹா

தொகுப்பாளர்: ("உன்னலாம் பேட்டி எடுக்குறேன் பாரு நான் லூசுதான் என மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்.) சரி அத விடுங்க சார். ராஜாஜியும், பெரியாரும் அரசியல் எதிரிகள். ஆனா அவங்களுக்குள்ள நாகரீகம் இருந்தது. நீங்களோ நாகரீகம்னா எங்க விக்கும்னு கேக்குறவரு. அதைப் பத்தி என்ன நினைக்குறீங்க?  

சைமன்: இப்படிதான் எம்.ஜி.ஆர் பதவியேற்பு விழாவுக்கு மகாத்மா காந்தி சக்கர நாற்காலியில் வந்திருந்தார். அப்போது எம்.ஜி.ஆர் எழுந்து நின்று வரவேற்றார். அதுதான் பண்பாடு, நாகரீகம். ராஜாஜி யார் என்று எனக்கு தெரியாது. திமுக காரரா? அவரால் தான் என் இனம் அழிந்தது. என் வீட்டில் மூட்டைப்பூச்சி வந்தது.. அவரால் தான் நேற்று வெயில் அடித்தது.. கறுவறுப்போம்.

தொகுப்பாளர்: ஈழம் அமைப்பது பற்றி.

சைமன்: அது ரொம்ப ஈசிப்பா. ஐநால என்னை அரைமணி நேரம் பேசவிட்டா ஈழம் வாங்கிருவேன். சூரியன் எப்.எம்ல பத்து நிமிசம் பேசவிட்டா கடலை உருண்டை வாங்கிருவேன்.

தொகுப்பாளர்: பிரபாகரனைப் பற்றி?

சைமன்: தேசியத்தலைவர் அவர்கள் என்னைப் பார்த்ததும், "நீதான் தமிழ்நாட்டின் வருங்காலம். என் தம்பி நீதான்" என்றார். பின் ஐந்து நிமிட சந்திப்பில் பல மணி நேரம் உரையாடினார்.
தொகு: நடிகர் விஜய் உங்கள் படத்தில் நடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டாரே?

சைமன்: ஆமாம். பகலவன் படத்தில் நடிக்கிறேன் என சொல்லிவிட்டு பின் எஸ்கேப் ஆகிவிட்டார். இப்போது ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். தேசியத்தலைவருக்கு பிடித்த நடிகர் ஜீவாதான். ஆமாம் ஜீவா தான். இதான் ஃபைனல். ஜீவா தான்.
(இடையில் ஒரு தம்பி மறித்து "அண்ணா ஜீவாவும் முடியாதுனு சொல்லிட்டாரு. டி.ஆர் தான் நடிக்கிறேனு சொல்லிருக்காரு" என்கிறார்) பிடித்த நடிகர் ஜீவானுதான் தேசிய தலைவர் முதல்ல சொன்னாரு. அப்புறமா டி.ஆர்னு மாத்திட்டாரு.

தொகு: திராவிடம் மேல உங்களுக்கு என்ன கடுப்பு?

சைமன்: திராவிடம் என்ன தம்பி கிழிச்சுச்சு? பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன்லாம் இப்ப படிக்கிறான். எல்லாரும் சமமா உக்காராங்க, பேசுறாங்க. ஆனா எங்க வீட்ல குழாயில தண்ணி இன்னும் 'லீக்' ஆகுதே. திராவிடம் என்ன தம்பி கிழிச்சுச்சு?

தொகு: பெரியார் பேரன்னு சொன்னீங்க. அம்பேத்கர் மாணவன்னு சொன்னீங்க. இப்ப  பெரியார திட்றீங்களே?

சைமன்: அது போன வாரம். நான் சொல்றது இந்த வாரம்.

தொகு: சைமன்ங்குறது உங்க பேரு. செந்தமிழனுங்குறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?

சைமன்: நான் செந்தமிழன் ஆகனும்னு என் தம்பிங்க ஆசைப்பட்டாங்க. அதான் எங்க அப்பா பேரை செந்தமிழன்னு மாத்தி செந்தமிழன் சைமன் ஆயிட்டேன். நாளைக்கே நான் டாக்டர் ஆகனும்னு என் தம்பிங்க ஆசைப்பட்டா எங்க அப்பா பேரை டாக்டர்னு மாத்திருவேன்.

தொகு: சார் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி சார். அப்புறம்..

(ஒரு தம்பி குறுக்கிட்டு சைமானிடம் எதோ பேசுகிறார். "அண்ணா மணி எட்டே முக்கால். செல்லமே சீரியல் போட்ருவாங்க" என்கிறார். சைமன், "அய்யயோ எட்டே முக்கால் ஆச்சா" என்றபடியே ஆடிடோரியத்தை விட்டு ஓடுகிறார்.)

பின்னாலேயே அவர் தம்பிகள்,
"கறுவறுப்போம் ஹொய்யா ஹொய்..
வந்தேறி ஹய்யா ஹய்...
வேரறுப்போம் ஹொய்யா ஹொய்..
ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பக்கு ஜும்பா...!
கறுவறுப்போம் ஹொய்யா ஹொய்..
வந்தேறி ஹய்யா ஹய்...
வேரறுப்போம் ஹொய்யா ஹொய்.. ."

என்று அவர்களின் நாம் டம்ளர் கட்சிப்பாடலை பாடியபடியே புரட்சி செய்ய ஓடுகிறார்கள்....!


Thursday 13 September 2012

முகநூல் கஜினிகள்



  இந்தியாவிலயே, ஏன் இந்த வர்ல்டுலயே வாய வச்சே போராடுற கோஷ்டினா அது நம்ம நட்ட நடு சென்டர் கோஷ்டி தான். எந்த பக்கம் இருந்து அவிய்ங்களை சாணியால அடிச்சாலும் திமுககாரன் நிக்கிற பக்கம் மட்டுமே தங்கள் இலக்கா வச்சு முன்னேறுறதுல அவிய்ங்களுக்கு நிகர் அவய்ங்கதான்!

இவனுகள பத்தி இன்னும் சிறப்பா சொல்லனும்னா
"கஜினி"னு சொல்லலாம். 17 முறை விடா முயற்சியுடன் படையெடுத்த கஜினி முஹம்மது இல்ல, இது நம்ம சூர்யா அரைமண்டையனா நடிச்ச கஜினி மாதிரி. அதுல அவருக்கு short term memory loss இருக்கும் ஆனா இந்த நடுசென்டர்காரய்ங்களுக்கு life time memory loss இருக்கும். நடுநிலைனா என்னனு கேட்டீங்கனா அது ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்கும்பாய்ங்க.
 

முதல்ல நம்ம தமிழ்நாட்டு லெவல்ல பார்ப்போம். இங்க 2011 மே மாசத்துல ஆட்சி மாறுனதே இவய்ங்களுக்கு தெரியல. அந்த அளவிற்கு நடுநிலமை நோய் முத்திப்போச்சு! கஜினில வில்லன் சூர்யா மண்டைலயே ஒரு போடு போட்ட மாதிரி இவய்ங்க தலைல அந்தம்மா கரண்டு பில்லு, பஸ் டிக்கெட்டு, பால் விலைனு ஒரே போடா போட்டதுல, மொத்தமும் மறந்து போய் இப்படி ஆயிட்டாய்ங்க போல பாவம்!

கஜினி படத்துல மண்டை பொளந்து மெண்டலாகுறதுக்கு முன்னாடி கடைசியா பாத்த அசினை மட்டும் சூர்யாக்கு நியாபகம் இருக்க மாதிரி இவய்ங்களுக்கு கடைசியா பாத்த திமுக மட்டும் நியாபகம் இருக்கு. எந்த போராட்டமானாலும் சரி, விலைவாசி ஏத்துனாலும் சரி, ஒருநாளைக்கு 28மணி நேரம் கரண்டை புடுங்குனாலும் சரி, திங்கிற சோத்துல விசத்த கலந்தாலும் சரி, போலிச வுட்டு அள்ளைலயே மிதிச்சாலும் சரி அவிய்ங்க குறிக்கோள் திமுகவ திட்டுறது தான். பொது விஷயத்துல கலைஞர் எதாவது அறிக்கை வுட்டா, நக்கல் அடிக்கிறது, அறிக்கை கொடுக்கலேனா ஏன் கொடுக்கலேங்குறது!

இன்னைக்கு ஒரு ஜென்டில்மேன் கலைஞர் வீல் சேர்ல போறத கிண்டல் பண்ணிருக்காரு. ஏண்டா உங்களுக்கெல்லாம் வயசானா வீல்சேர்ல போகாம 'க்யூரியாசிட்டி' விண்கலத்துலயாடா போவீங்க?

போன ஆட்சில சொல்லிட்டு ரெண்டு மணி நேரம் கரண்ட்ட கட் பண்ணதுக்கு வாயிலயும், வயித்துலயும் அடிச்சுக்கிட்டு "அய்யோ போச்சே, போச்சே"னு அழுதாய்ங்க. இப்ப ஒருநாளைக்கே ரெண்டு மணி நேரம்தான் கரண்ட் இருக்கு. ஆனா ஒருபய வாய தொறக்கலையே! எல்லாரும் ஈடன் கார்டன்ல வாழுற ஆதாம் ஏவாள் மாதிரி சந்தோசமா இருக்காய்ங்க போல!

இவய்ங்க தான் இப்படினா புதிய தலைமுறை டிவி அதுக்கு மேல. நடுநிலைமைய ஓல்சேல் குத்தகைக்கு எடுத்தவய்ங்க இவய்ங்கதான். அம்மா செருப்பால அடிச்சா கூட அம்மா செருப்பால் ஆசிர்வதித்தார்னு செய்தி வாசிக்கிறாய்ங்க. சேனல்4 போட்டத மறு ஒளிபரப்பு பண்ணி போராளிகளோட ஃபேவரிட் சேனல் ஆனாய்ங்க. இப்ப பாத்தா இவய்ங்களே அங்க காலேஜ தொறந்து வச்சிருக்காய்ங்க. இதப்பத்தி தமிழ்தேசியவாதி எவனாச்சும் பேசுறானானு பாத்தா.. ஹ்ம்ம் ஹ்ம்ம்... இதெல்லாம் ஒரு பொழப்பு!

கூடங்குள போராளித்தலைவர் என்னனா மன்மோகன் சிங்தான் தமிழக முதல்வர் மாதிரி மத்திய அரசை மட்டும் குறை சொல்றாரு! ஆகமொத்தம் உதயகுமாருல இருந்து உதவாத குமாரு வரைக்கும் இப்படிதான் இருக்காங்க!

ஒரு படத்தில் வடிவேலு காமெடில, சரக்குனு நினைச்சு விசத்த குடிச்சிருவாரு வடிவேலு. குடிச்சுட்டு, "என்னடா தொண்டய கவ்வுது"ம்பாரு..,
மற்றொருவர்: "விஷம் குடிச்சா அப்படிதான்னே இருக்கும்"னு சொல்லுவாரு.

அது மாதிரி இப்ப தமிழ்நட்டு மக்கள் ஓவரா ஆசப்பட்டு அதிமுகவ தேர்ந்தெடுத்துட்டு "தொண்ட கவ்வுதேடா"ங்குறாய்ங்க!
இப்ப நம்ம சொல்லுவோம், "மாற்றம் வேனும்னு கேட்டா இப்படிதாண்ணே இருக்கும்..!!"