Showing posts with label maatran. Show all posts
Showing posts with label maatran. Show all posts

Thursday, 18 October 2012

மாற்றான் - எனர்ஜியான் குடிங்க..!!



இந்தப்படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி மாற்றான் படத்தோட கதை இந்தப் படத்தோட காப்பி அந்தப் படத்தோட காப்பி, ஒரு நாவலின் கதைன்னு நெறைய பேரு சொன்னாங்க,ஆனா டைரக்டர் கே.வி ஆனந்த், அதெல்லாம் கிடையாதுப்பா மாற்றான் யார மாதிரியும் எது மாதிரியும் கிடையாது அவன் ஒரு புது மாதிரி,உண்மையிலையே மாற்றான்னு அடிச்சு சொன்னாரு. ஆனா படத்த பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியுது முன்னாடி சொன்ன மாதிரி எதாவது ஒரு படத்தோட காப்பியாவே இருந்திருக்கலாம்.ஏன்னா சில படத்துல அடுத்து அடுத்து என்ன ஆகும்னு பாக்குற ஆடியன்ஸ்க்கு தான் தெரியாம இருக்கும்,ஆனா இந்தப்படத்துல டைரக்டருக்கே தெரியாம பாவம் தவிச்சிருக்காரு.

படத்தோட கதை, அகிலன்-விமலன் சூர்யாக்களின் தந்தை திறமையா ஜெனிடிக் எஞ்சினியர் அவர் ஆரம்பிக்கும் ஒரு ஊட்டச்சத்து பவுடர் கம்பெனி 'எனர்ஜியான்'ல (Energion) எதோ கலப்படம் இருக்குறதா பலபேர் சொல்லியும் அத நிரூபிக்கமுடியல. அதோட பின் விளைவுகள தெரிஞ்சிகிட்டு, அப்பா தான் அதுக்கு காரணம்னு அவரை எதிர்க்குறாரு விமலன் சூர்யா. கலப்படத்துக்கான ஆதாரம் உள்ள pendrive விமலன் சூர்யாகிட்ட கிடைக்குது.அத பறிக்க சூர்யா அப்பா ஆள் அனுப்புறாரு அவங்களால விமலன் சூர்யா கொல்லப்படுறாரு.அப்புறம் என்ன இன்னொரு சூர்யா பழிவாங்குறது+உண்மையை கண்டு புடிக்கிறது போன்ற வேலைகள்ல களம் இறங்குறாரு.

ஒட்டிப் பிறந்த ரெட்டைப் பிறவிகள் கதைல சூர்யா எப்படி கலக்குறார்னு பாக்குறதுல ஒரு ஆசை. சூர்யாவும் அந்த நம்பிக்கைய மோசம் பண்ணாம (ப்ரியாமணி மாதிரியே) நல்லாவே நடிச்சிருக்காரு (அவரோட முந்தய படம் கேரக்ட்டர் ரெண்டு சேர்ந்து நடிச்ச மாதிரி இருந்துச்சு). அதுவும் முதல் பாதில மட்டும். ரெண்டாவது பாதில 'சிவகாமி கம்ப்யூட்டர்' தன் சித்து விளையாட்ட காட்டுன மாதிரி அவரோட மாமூலான கிளாஸ் எடுக்குற வேலைய இந்தியாவுல ஆரம்பிச்சு அப்படியே உக்§Åனியா போயி அங்கிருந்து அப்படியே குஜராத்ல முடிச்சு கடைசில ஜனாதிபதி விருதும் வாங்கிறாரு.(ரெண்டு வருஷத்துல ரெண்டு ஜனாதிபதி விருது, ஏழாம் அறிவிலும், மாற்றானிலும் பெற்ற ஒரே தமிழன்..!! அவர் இதுபோல பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன்). A.R.முருகதாஸும், K.V.ஆனந்தும் போட்டிப் போட்டு சூர்யாவுக்கு ஜனாதிபதி விருது வாங்கிக் கொடுத்திருக்காங்க. அப்புறம் வழக்கம் போல மொக்க காமெடி, சிக்ஸ் பேக் டூயட்,நெஞ்சுல குத்திக்கிட்டு சோகப்பாட்டு, ஸ்பெஷல் டயலாக் டெலிவரி ஸ்டைல், சண்டைனு அவரு வேலைய முடிச்சிட்டாரு. சிக்ஸ் பேக் வச்சிருந்தா சண்ட சீன்ல காட்டுனா பரவாயில்ல,எதுக்குய்யா பாட்டு சீன்ல சட்டைய கழட்டிப்போட்டு சுத்துறிங்க. இங்க பரவாயில்ல, அங்க ஹிந்தி படத்துல ஜான் ஆபிரகாம்னு ஒருத்தன் அடுத்த கட்டத்துக்கு போய்ட்டான், அதாவது ஜட்டியையும் பாதி கழட்டி விட்டு ஆடுறான். அது வரைக்கும் நம்ம சினிமா பரவாயில்ல.  

காஜல் அகர்வால்,படத்துல அழகா இருப்பாங்க ஆனா பாதி படத்துல அவங்க பேசுறதே புரியாது ஏன்னா சூர்யாவுக்கு அவங்கதான் 'கூகுள் ட்ரான்ஸ்லேட்டர்'. ரஷ்யன் மொழி பெயர்ôÀ¡ளர். சூர்யா^2 நடுவுல சிக்க வச்சிðடாங்க. ஒரு பெண் போலிஸ் காஜல் கிட்ட இவைங்கள என்ன ஆடித்தள்ளுபடில புடிச்சியானு கேப்பாங்க, அதுக்கு அர்த்தம் படத்தோடரெண்டாவது பாதில தெரியும். ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான இருக்காங்க அதுனால என்னனு முதல்ல ஒருத்தன லவ் பண்ணிட்டு அவன் போனதுக்கு அப்புறம் இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்குறாங்க. 'வாட் எ ப்ராக்டிகல் லவ் ஸ்டோரி'.அடுத்தது நம்ம ஹாரிஸ் ஜெயராஜ். அவர் பங்குக்கு வெயிட்ட காட்டிட்டாரு. அவரும் எத்தன படத்துல தான் புது ட்யூன் போடுற மாதிரி சமாளிப்பாரு பாவம். அதுவும் கடைசில ஒரு பேக்கிரவுண்டு மியூசிக் போடுவாரு பாருங்க.. கண்ணமாம்பேட்ட தரத்துல. ச்சே. வாய்ப்பே இல்ல. இந்த படத்துல கூட முந்தின படப் பாட்டு சாயல் இருந்துச்சு, இவரு அடுத்த படம் துப்பாக்கி தான் உச்சக்கட்டம். படம் அறுவையா இருந்து பாத்திருக்கோம் ஆனா பாட்டே அறுவையா இருக்குறத துப்பாக்கி படத்துல தான் அனுபவிச்சேன்.

முதல் பாதி கூட எதோ போயிருச்சு, படத்துல பல மொக்க இருந்தாலும் சில விஷயங்கள் நல்லா இருக்கு. எடிட்டிங்,கேமரா,தீம் பார்க் சண்டை,ரெட்டையர் கிளப் பாட்டு சீன் எல்லாம் சூப்பர். ஆனா எல்லாத்தையும் சேத்து ரெண்டாவது பாதில மொக்க பண்ணிட்டாங்க. சூர்யாவுக்கு ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளாண்ட் பண்ணது நமக்கு ஞாபகம் இருக்கு ஆனா அவரு மறந்துட்டு இங்கேயும் அங்கேயும் பறந்துகிட்டே இருக்காரு.  அப்பாதான் கொலைகாரர்னு தெரியிற சீன், கி¨Çமேக்ஸ் சீன்ல அப்பா கேரக்டர் வில்லத்தனமா(!!??) பேசுற டயலாக் எல்லாம் செம சப்பையா இருக்கு. எதோ ஏழாம் அறிவு படத்த கொஞ்சம் பட்டி டிங்கரிங் பாத்து வேற ட்ரஸ் போட்டு விட்டு மாற்றான்னு காட்டிட்டாங்க.   
 என் நண்பன் ஒருத்தன் சூர்யா ரசிகன் (படத்த first show பாத்தவன்) சொன்னான், "நண்பா நீ பாத்ததுல படத்துல நெறையா சீன் கட் பண்ணிடாங்க போல அதான் இப்படி சொல்றனு சொன்னான்'. நான் வடிவேலு கைப்புள்ள காமெடில வர அடி கொடுத்த கைபுள்ளைக்கே இந்த நிலமைனா அடி வாங்குனவன் உயிரோட இருப்பான்னு நெனைக்கிறியா நீயினு சொல்ற மாதிரி, நான் நினைச்சிகிட்டேன், அடப்பாவி நெறையா சீன் கட் பண்னத பாத்த எனக்கே இந்த நிலமைன்னா, முழுசா பாத்தவன் ஒழுங்கா வீடு போயி சேர்ந்திருப்பான்னு நெனைக்கிறியா நீயி.

படத்த முழுசா பாத்து முடிக்கனும்னா நீங்களும் எனர்ஜியா ஒரு லோட்டா குடிச்சிட்டு தான் போகனும்.எனர்ஜியான் குடிச்சா என்ன எபெக்ட்னு படத்துல பாத்துக்கோங்கோ..!!