Monday 21 March 2016

49-ஓ போடலாமா..??

 மழை, வெள்ளம், நிவாரணம்னு சென்னை மட்டும் இல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே பரபரப்பா இருந்துச்சு. நிவாரணம், உதவி எல்லாம் இவ்வளவு கிடச்சதுக்கு பெரும் காரணமே இந்த சமூக வலைதளங்கள் தான். எல்லா பக்கமும் உதவி கேட்குற தகவுலும், உதுவுபவர்கள் தகவலும் சும்மா பறக்குது. களப்பணிலயும் கனிணிப் பணிகள்லையும் இளைஞர்கள் பங்கு ரொம்பவே அதிகம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சைடுல இன்னொரு க்ரூப்பும் இருந்தாய்ங்க. மீம்ஸ் போட்டு புரளி கெளப்புறவய்ங்க. இங்க முதலை வந்துருச்சு, அனகொண்டா தப்பிசிருச்சுன்னு பீலா விடுறதுல இருந்து அரசியல் பக்கமும் தாவி மீம்ஸ் போடுவாறாய்ங்க சில பேரு.

"ஏமாற மாட்டோம் இனிமே" , "திமுக, அதிமுக ரெண்டுமே தோத்துறும்" , "49-ஓ தான் இனிமே" அது இதுன்னு கெளம்பிருக்காங்க. இவனுங்களுக்கு பதில் சொல்ல போனோம்னாலோ, இல்ல எதாவது கட்சிக்காரங்க அவங்க கட்சி செஞ்ச நிவாரணப்பணிகளப் பத்தி போட்டாலோ..அவங்ககிட்ட போயி..
"ச்சே..இந்த நேரத்துலையும் அரசியல் பேசுறீங்களே" , "so bad yaar", "these people are so mean"னு அலட்டுவாய்ங்க.

 ஓட்டு போடுங்கன்னு சொல்றதோ, இத செஞ்சோம் அத செஞ்சோம்னு சொல்றதோ மட்டும் அரசியல் இல்ல.. ஓட்டு போடாதிங்க, அரசியல் பேசாதிங்கன்னு சொல்றதுமே கூட அரசியல் தான்.

சரி அப்படி பேசுறது தான் லாஜிக்கா பேசுறாய்ங்களா..எவன் என்ன அனுப்புனாலும் அப்படியே ஷேர் பண்றது, அப்படி பண்ணாட்டி தெய்வ குத்தம் ஆயிரும்னு உடனே பன்ணிறாய்ங்க. இது எல்லாத்துலையும் உச்சக்கட்டம் ஒருத்தன் போட்ருக்கான் "எந்த கட்சிடா எங்கள காப்பாத்துச்சு (நாயே கட்சி எதுக்குடா காப்பாத்தனும், அரசு தானடா காப்பாத்தனும்) அதுனால எல்லாம் 49-ஓ க்கு ஓட்டு போடுங்க, கவர்னர் ஆட்சி வரட்டும் இந்த தடவ.. எல்லா கட்சிக்கும் அசிங்கமா இருக்கட்டும்"னு



இவனுக்கெல்லாம் தல கவுண்டமனி தான் லாயக்கு. "டேய் நாயே 49-ஓ ன்னா என்னனே தெரியல உனக்கு..இதுல அரசியல் கட்சிக்கு அசிங்கமாம்..உனக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுத்ததுதான்டா அசிங்கம்..போ இன்னும் நாலு வருசத்துக்கு பத்தாவதே படிச்சிட்டு வா"ன்னு விரட்டிவிடனும். இவன் பரவாயில்ல இன்னொருத்தன் "please vote for 49-O, Let Our President Rule this time" னு போடுறான்.

ஏங்க உங்களுக்கு இந்த உள்ளூர் அரசியல்வாதி, எம்.எல்.ஏ, முதல்வர் எல்லாம் வேணாம்..ஸ்ட்ரெய்ட்டா ஜனாதிபதி ஆட்சி தான் வேணுமா??


இவைங்களாம் எங்க இருந்து கெளம்புராய்ங்கன்னே தெரில..ஸ்லீப்பர் செல் மாதிரி இருக்காய்ங்க கரெக்ட்டா எலெக்சன் நேரத்துல புகுந்து குட்டைய கொழப்புவானுங்க. இவைங்கள பொருத்த வரைக்கும் NOTAங்குறது ஒரு கட்சி, 49-ஓ தான் அதோட சின்னம் (இப்போ வேற நிகமாவே நோட்டாக்கு சின்னம் கொடுக்க போறாங்களாம்,பைத்தியம் புடிச்சு திரிய போறாய்ங்க) கவர்னர்/ஜனாதிபதி தான் அதுல நிக்கிற வேட்பாளர். அப்படி யாராவது உங்களுக்கு தெரிஞசவங்க நெனச்சிட்டு இருந்தா அவங்களுக்கு தெளிவுபடுத்துங்க.

49-ஓ - தேர்தல்ல கள்ள ஓட்டு போடுறத தடுக்க ஒரு வழிமுறை. ஒரு ஆளு வீட்ல உக்காந்துட்டு எல்லா கட்சியையும் குறை மட்டுமே சொல்லிட்டு இருந்தா அங்க பூத்துல அவன் ஓட்ட மட்டும் இல்ல மொத்த குடும்ப ஓட்ட எதோ கட்சிக்காரங்க கள்ள ஓட்டா போட்டுட்டு போயிருவாய்ங்க. அதை தடுக்க தான் இந்த வழிமுறை. ஆரம்ப காலத்துல 49-ஓன்னா ஒரு Form பூர்த்தி செஞ்சு கைநாட்டு வச்சு பெட்டில போடனும். ஆனா இப்ப அதுக்கு பதிலா 49-ஓ (None Of The Above -NOTA) பட்டன் சேர்த்திருக்காங்க. அதாவது எந்த கட்சியும் புடிக்கலன்னு தான ஓட்டு போட போக மாட்ற அத இங்க வந்து இந்த பட்டன அழுத்தி சொல்லிட்டு போன்னு சொல்றதுதான் இதுனிது மூலமா உங்க ஓட்ட வேற யாரும் ஏமாத்தி போட்டுற முடியாத படி செய்யலாம்.

 எந்த ஒரு தேர்தல்லையும் 99.99999% கட்சிகளைவிட இது அதிக வாக்கு பெறாது. ஒருவேளை அப்படி விழுந்தாலும்...அதுக்கு அடுத்த படி யாரு அதிக வாக்கு பெற்றிருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார். ஏன்னா 49-ஓ ல போடுறது பேரு ஓட்டு கிடையாது. உங்க விருப்பம் இல்லாததை பதிவு செய்ய மட்டுமே அது பயன்படும். மத்தபடி இதுல அதிக வாக்கு விழுந்தா ஜனாதிபதியோ, கவர்னரோ, சகாயமோ, ஜார்ஜ் புஷ்ஷோ, ஜாக்கி சானோ எல்லாம் அட்சிக்கு வர முடியாது.



ஒரு நாட்டோட ஜனநாயகம் பத்தி தெரிஞ்சிக்குறதுக்கு முக்கியமான இடம் தேர்தலும், வாக்கு சதவிகிதம் தான். அந்த நேரத்துல முக்கால்வாசி இளைஞர்கள் கம்பெனில லீவு இல்லன்னு சொந்த ஊருக்கு போயி ஓட்டு போடுறது இல்ல..லீவு இருக்குறவன்ல பாதி பேரு கூட்டத்துல நிக்கனும்னு ஓட்டு போட போறது இல்ல. இந்த கட்சிக்கு தான் போடனும், அந்த கட்சிக்கு போடக்கூடாதுன்னு சொல்லல..எதுல போட்டாலும் என்னன்னு தெரிஞ்சுகிட்டு போடுங்க. ஓட்டுங்குறது உங்க உரிமை. அவனுக்காக நீங்க போடல..உங்களுக்காக போடுங்க. காச வாங்கிட்டு தப்பா போடுறதும் ஒன்னு தான் காசு வாங்காம ஓட்டு போடாம இருக்குறதும் ஒன்னுதான். கட்சி புடிக்கல, சின்னம் புடிக்கலன்னு ஓட்ட வீணடிக்காதிங்க.. வேட்பாளர பாருங்க.. யோசிங்க.. ஒவ்வொரு ஓட்டும் அடுத்த 5 வருசத்த மட்டும் இல்ல 50 வருசத்த கூட தீர்மானிக்கும்.

 இணையத்துல எவ்வளவோ உண்மைகள், ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கு..உடனுக்குடன் தெரிய வருது. இதே பத்து வருசத்துக்கு முன்னாடியா இருந்தா வெள்ளத்துக்கு காரணம் மழை தான்டா சனியன்னு நெனச்சிட்டு இருந்திருப்போம்..ஆனா இப்போ சராசரி மக்களுக்கு கூட தெரிஞ்சிருக்கு அணைய தப்பான நேரத்துல அளவுக்கு அதிகமா திறந்து விட்டது தான் காரணம்னு. அதுனால ஃப்ரென்டு அனுப்பிட்டாளே/ அனுப்பிட்டானே அத ஃபார்வர்ட் பண்ணனுமே பண்ணாதிங்க..உண்மையான்னு தெரிஞ்சிட்டு பன்ணுங்க. 5 வருசத்துக்கு ஒரு தடவ மாத்தி மாத்தி பட்டன் அமுக்குற தான் மாற்றம் நெனைக்குறது எவ்வளவு தப்போ அது மாதிரி தான் ஓட்டு போடாம புறக்கணிக்கிறதும்.



கண்டிப்பா ஓட்டு போட போங்க... சிந்திச்சு ஓட்டு போடுங்க..!!

No comments:

Post a Comment