Wednesday, 28 November 2012

தமிழகம் என்ற ஒரு இருண்ட கண்டம்..!!                                       மின்வெட்டு. இன்னைக்கு மக்கள் அதிகமா அவதிப்படும் மிகப் பெரிய பிரச்சனை.முன்னாடி எல்லாம் ஹோட்டல் பொங்கள்ல இருக்குற முந்திரி பருப்பு மாதிரி எப்பவாது கரெண்ட்டு போகும், ஆனா இப்ப எல்லாம் பந்தியில போடுற பிரியாணில பீஸ் மாதிரி தான் கரெண்ட்டே கிடைக்குது. கரெண்ட் எப்ப போச்சுன்னு கேட்டது போயி கரெண்ட்டு வந்துச்சான்னு கேக்குற நிலமை. இன்னும் சில பேரு மின்வெட்டோட ஒன்றி போயி கரெண்ட்டு வந்ததே தெரியாம கரெண்ட்டு இருந்தும் விசிறியால விசிறிகிட்டும், மெழுகுவர்த்தி வச்சிக்கிட்டுமே வாழ ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு நாள் தியேட்டர்ல நைட் ஷோ படம் பாக்குறப்போ மின்வெட்டு வழக்கம்போல அது வேலைய காட்டிட்டு இருந்துச்சு,ஜெனெரேட்டர்,கரெண்ட்டுனு மாத்தி மாத்தி ஓடிட்டு இருந்துச்சு, ஒரு மூனாவது தடவ ஜெனெரேட்டர்ல இருந்து கரெண்ட்டுக்கு மாத்தும்போது பக்கத்துல ஒருத்தர் கேக்குறாரு,"கரெண்ட் போச்ச இல்ல வந்துச்சா,எதுக்கு ஆப் ஆகுதுனே தெரியலைனு.எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி மக்கள் கொஞ்ச நாள்ல அதோடவே ஒன்றி வாழ பழகிக்குவாங்கக்குறதுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இப்போ மட்டும் தான் மின்வெட்டு இருக்கா, போன ஆட்சியிலதான் முதலில் ஆரம்ப்பிச்சது  அதனால் அவங்கதான் காரணம்னு சில அறிஞர்கள் இந்தப் பிரச்சனையை திசைத் திருப்புறாங்க. ஆமாம், போன ஆட்சியிலும்தான் மின்வெட்டு இருந்தது, ஆனால் முன் அறிவிப்போடு சொன்ன நேரத்தில் மட்டும்தான் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது (இத சொல்லி சொல்லி வாயே வலிக்குது.. எத்தன நாள்தான் தெரியாத மாதிரியே நடிப்பாய்ங்களோ..!). ஆனால் இப்போ, மொத்தமே மூன்று மணி நேரம் தான் கரெண்ட்டு இருக்கு அதுவும் சில நாள் கிடையாது.நேரம் காலம் பாக்காம கண்ட நேரத்துக்கு அவனுங்க இஷ்டத்துக்கு கட் பண்ணிருவாங்க.பகல்ல பண்ணா கூட பரவாயில்ல, இராத்திரி அதுக்கு மேல, வெளிய மக்கள் தைரியமா போக முடியல, பெரியவங்க, குழந்தைங்க நிம்மதியா தூங்க முடியல, மின்வெட்ட பயன்படுத்தி கொலை,கொள்ளைனு சகலமும் சவுகரியமா நடக்குது. பண்டிகை நாட்கள நம்பி கடன் வாங்கி தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு இது பெரிய அடி. இன்வெர்ட்டர் சார்ஜ் ஆகுற அளவு நேரம் கூட கரெண்ட் இருக்க மாட்டேங்குது. சாய்ந்தர நேரம் கடைவீதி பக்கம் போனா ஒரே இருளடைஞ்சு கிடக்கு. 

ஏன் மின்வெட்டு நேரம் அதிகமாச்சு, அதுக்கான காரணம் என்ன, சரி செய்ய என்ன பண்ணப்போறிங்கனு நமக்கும் கேக்க முடியாது கேட்டாலும் சொல்லமாட்டாங்க. மின்வெட்டை சரி செய்ய கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட (Electricity Projects) அனைத்து முயற்சிகளும்,திட்டங்களும் அப்படியே நிலுவையில்,கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுவே பெரும் பின்னடைவு, மின்வெட்டு நேரம் உச்சத்திற்கு சென்றதுக்கான முக்கிய காரணம். ஆனால் இதற்கு எந்த விளக்கமும் இன்றைய அரசு தரவில்லை. ஒரு மாநிலமே இருளில் மூழ்கி இருக்கும் நேரத்தில் கூட மக்கள் பிரச்சனையை பொருட்படுத்தாமல் பழிவாங்கும் படலமாகவே செயல்பட்டுக்கொண்டும்,அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டுமே காலத்தை கடத்திக்கொண்டு ஒரு அரசு இருப்பது எவ்வளவு கையாளாகாத்தனத்தை குறிக்கிறது. பல பத்திரிக்கைகளும் இதைப்பத்தி கேட்க துணிவில்லாமல் மின்வெட்டுனு ஒரு பிரச்சனை இருக்குற மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பிற கட்சிகளின் அரசியலையே நாட்டின் தலைப்பு செய்தியாக போட்டு அரசிடம் ஆதாயம் தேட பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டுல உற்பத்தியாகும் மின்சாரத்தில் முக்கால்வாசி வேற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது,இருக்கும் கொஞ்ச மின்சாரத்திலேயும் சென்னைக்கு மட்டுமே முக்கால் பங்கும், மீதி தமிழகத்துக்கு மீதி பங்குனு கூரு போட்ருக்காங்க. அது ஏன் சென்னைக்கு மட்டும் கருணைனு கேட்டா,அங்க தலைமையிடம், தொழிற்சாலைகள் அதிகம், அதனால் அங்கு மின்சாரம் அதிகம் தேவைப்படும் அதனால்தான் இந்த பாகுபாடுனு சொல்றாங்க. ஆமா தமிழகத்தோடு ஒப்பந்தம் போட்டு தொழிற்சாலைக்கள் தொடங்கிய அனைத்து தொழிற்சாலைகளுக்கும் கண்டிப்பாக தேவையான மின்சாரம் அளிக்கப்பட வேண்டும். இதை மீறினால் அரசுக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் வரும், பெருமளவு இழப்பீடும் கொடுக்க வேண்டியது வரும். ஆகையால் இது தவிர்க்க முடியாத ஒன்று. தொழிற்சாலைகளுக்கு கொடுக்கும் மின்சாரத்தையும் நிறுத்த முடியாது மக்களுக்கும் மின்சாரம் அளிக்க வேண்டும். இதற்கு என்ன வழி.?

நிலுவையில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை (Electricity projects) செயல் படுத்தினாலே தமிழத்துக்கு இன்றைய நிலையில் போதுமான மின்சாரம் கிடைக்கும். மேலும் இது போல் நிலையை வருங்காலத்தில் தவிர்க்க புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் போடும் போதே மின் உற்பத்தி அளவை கணக்கில் கொண்டு பகுதி மின்சாரத்தை மட்டும் அரசு வழங்கி மீதம் உள்ள மின் தேவைக்கு சூரிய சக்தி மின்சாரம்,   போன்றவற்றை கண்டிப்பாக தொழிற்சாலைகளை நிறுவ சொல்ல வேண்டும் (குறிப்பிட்ட அளவிற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களில் சூரியசக்தி மின்சாரம் உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்று இப்போது நிபந்தனை உள்ளது) . சூரிய சக்தி மின்சாரம் போலவே "bloom energy" என்று ஒரு மின் உற்பத்தி முறை உள்ளது. இயற்கை எரிவாயு அல்லது bio gasஐ செலுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

 இந்த Bloom energyல் பல அடுக்குகளாக solid oxide fluid cells இருக்கின்றது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட fuel cell technology களிலேயே சிறந்ததே இந்த solid oxide fluid cell technology. இந்த cell களுக்குள் அனுப்பப்படும் இயற்கை எரிவாயு, அல்லது பயோ கேஸில் இருந்து அதிகப்படியான எலக்ட்ரான் உருவாகி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் உற்பத்தி முறையால் குறைந்த செலவில், அதிக மின்சாரம் தொடர்ந்து தயாரிக்க முடியும். இதில் சுற்றுசூழல் மாசும் மிக குறைவு. அமெரிக்காவில் இன்று பல தொழிற்சாலைகள் இந்த முறையையே பின்பற்றுகின்றன.இது போன்ற திட்டங்களை புதிதாக தொடங்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தினால் கணிசமான அளவு மின்சாரம் மிச்சமாகும்.


இன்னும் கொஞ்ச நாள்ல மின்வெட்டு பிரச்சனையை மக்களே மறந்து போகக்கூட வாய்ப்பு இருக்கு,அதுக்குள்ள இருளும் இருள் சார்ந்த இடமுமா இருக்குற தமிழகத்துக்கு இந்த மாதிரி ஏதாவது மின்சாரத்தை சேமிக்க, அல்லது உற்பத்திக்கான திட்டம் இருந்தால் தெரிவிக்கலாம்.!! 

No comments:

Post a Comment