Wednesday 8 August 2012

இணையத்தில் "டமில் டேஸிய போராளி" ஆவது எப்படி ??

டமில் டேஸிய போராளி ஆகுறது ரொம்ப ஈசி..!! கீழ இருக்குற சிம்பிள் ஸ்டெப்சை ஃபாலோ பண்ணுங்க..






நீங்கள் சோத்துக்கே வக்கில்லாமல் வீட்டில் மூதேவி என திட்டு வாங்கும் இளைஞனாய் இருந்தால் முதல் தலையாய கடமையாய் பேஸ்புக்கில் ஒரு கணக்கை தொடங்கிக்கொள்ளுங்கள் (உங்களுக்கு ஏற்கனவே ஒரு கணக்கு இருந்தாலும் பரவாயில்லை..).

வீட்டில் எவ்வளவு நல்ல பெயர் உங்களுக்கு வைத்திருந்தாலும் அதை ப்ரொபைல் பெயராக வைக்க கூடாது. உங்கள் ப்ரொபைல் பெயரை பார்க்கும் போதே அது போலி ப்ரொபைல் என்று.. சாரி.. போராளி ப்ரொபைல் என்று தெரியவேண்டும். (எ.கா) வீரத்தமிழன், சிங்கத்தமிழன், கரடிதமிழன், அழகியடமில் மகன். அல்லது உங்கள் பெயரோடு டைகர், புலி ஆகிய அடைமொழிகளை சேர்த்துக்கொள்லாம். சுரேஷ் டமில் புலி, ரமேஷ் தமிழ் டைகர், என இருந்தால் நல்ல ரீச் கிடைக்கும். கொட்டை எடுத்த புளியாக நீங்கள் இருந்தாலும் புலி என போட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் புலி எதுவும் முகநூலில் இல்லை!

அடுத்த கட்டமாக ப்ரொபைல் படம். மறந்தும் உங்கள் படத்தை போட்டுவிடாதீர்கள். இருக்கவே இருக்கிறார்கள் பிரபாகரன், சேகுவேரா! அவர்கள் படத்தை போட்டுக்கொள்ளுங்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் நரம்பு புடைக்க 'ஒறவுஹலே' என கத்தி கூச்சல் போடுபவர் படத்தை வைக்கலாம். (கெட்டவார்த்தையில் திட்டு கிடைத்தால் நிர்வாகம் பொறுப்பல்ல)

கவர் போட்டோக்கு வைக்கும் படமும் மிக முக்கியம். இது ஈழம் சம்பந்தமான படம் எதாவதாக இருக்க வேண்டும். அல்லது அடுத்த கட்டத்துக்கு போக வேண்டுமானால் தலைவர் பிரபாகரன் படத்தையோ, விடுதலை புலிகள் 'லோகோ'வையோ வைக்கலாம். இல்லை எதேனும் சின்ன குழந்தை சோகமாக இருக்கும்படியாக ஒரு படத்தை வைக்கலாம்.

உங்கள் இருப்பிடத்தை இந்தியாவிற்குள் இருப்பதாக காட்டிகொள்ளாதீர்கள். காரைக்குடியில் இருந்தாலும் கனடா என்று போட்டுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நீங்கள் போடும் 'ஸ்டேடஸ்' வெகுதூரம் ரீச் ஆகும். உங்களுக்கு தனி அடையாளம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் "அடி வாங்கனுமோ?" என்ற பயமில்லாமல் கண்டதையும் பேசலாம்.

அடுத்ததாக, பேஸ்புக்கில் ஈழம், தமிழ் தேசியம் சம்பந்தமாக உள்ள க்ரூப்,பேஜ் ஒன்னு விடாமல் அத்தனையிலும் சேர்ந்துவிடவும். அதில் பதிவு போடுகிறீர்களோ இல்லையோ. கண்டிப்பாக 'லைக்' மற்றும் 'ஆம்.சரியாக சொன்னீர்கள் தோழர்' போன்று கமெண்ட் போட்டுவிடுங்கள். அல்லது பதிவில் யாரை திட்டிகொண்டு இருக்கிறார்களோ, அவர்களோடு சேர்ந்து நீங்களும் திட்டியோ அல்லது அந்த கமெண்டுக்கு லைக் போட்டு உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள். நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.

இதில் ஒரு பெரிய ப்ளஸ் என்னவென்றால் உங்களுக்கு எந்த ஒரு வரலாறும் தெரிந்திருக்க தேவையில்லை. உங்களுக்கு முன் அந்த பதிவில் கமெண்ட் போட்டவர் திட்டி இருந்தால் நீங்களும் திட்டுங்கள்.முன்னே பாராட்டி பேசியிருந்தால் நீங்களும் கோஷம் போடுங்கள்.  மேலும் எம்.ஜி.ஆர் காலத்தில் சிம்பு சூப்பர்ஸ்டார், சிம்பு காலத்தில் தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டார் என எதுவேண்டுமானாலும் உளறலாம். யாருக்கும் தெரியாது. ஏனென்றால் நீங்கள் டமில்டேசிய போராளி ஆயிற்றே!

 முக்கியமாக இப்போது ஆட்சியில் இருப்பவர்களை பற்றி பேச கூடாது. அது உங்களுக்கு பெரும் ஆபத்தில் முடியும். அது உங்களுக்கே தெரியும்.ஆட்சியில் இல்லாத திராவிட கட்சிகளை உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கேவலமாக பேச வேண்டும். அவர்களால் தமிழ்நாட்டில் நாம் என்ன பயன் அடைந்திருந்தாலும் அதை பொருட்படுத்தாது அவர்கள் தலைவர் முதல் தொண்டன் வரை ஒருவரையும் விட்டு வைக்க கூடாது. முடிந்தால் நமீதாவுடன் இருப்பது போன்று கீழ்த்தரமாக 'போட்டோ ஷாப்பில்' மார்ப்பிங் செய்து அவர்கள் படத்தை போஸ்ட் செய்யலாம். இதுதான் இணைய கொரில்லா முறை!

யார் நமக்கு எதிர் கருத்து சொன்னாலும் அவனை வந்தேறி, தெலுங்கு வந்தேறி, மனவாடு, கருவாடு, சேச்சி, நைனா என கூச்சபடாமல் திட்டலாம்.  உங்கள் வீட்டில் தண்ணி வரவில்லையென்றாலும், கொடநாட்டில் ஜெயாவுக்கு கொசு கடித்தாலும், எதிர்த்தவீட்டு கோவாலுக்கு எயிட்ஸ் வந்து செத்தாலும் திராவிடம்தான் காரணம் என செம்ம திட்டு திட்ட வேண்டும். கூடவே நீங்கள் மேப்பில் கூட பார்த்திருக்காத குஜராத்தை புகழ்ந்து தள்ளி உங்கள் மதவெறியையும் இதில் திணிக்கலாம். இவை எல்லாத்திற்கும் உங்களுக்கு சிறப்பு மதிப்பெண் கிடைக்கும்.

அதிமுக்கியமாக தப்பித்தவறி கூட தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் பற்றி பதிவோ அல்லது கமெண்டோ போட்டுவிடக் கூடாது. மின் கட்டணத்தை உயர்த்தினாலும் சரி, பால் விலையை ஏற்றினாலும் சரி, பேருந்து கட்டணத்தை உயர்த்தினாலும் சரி, நூலகத்தில் கூத்து நடத்த அனுமதித்தாலும் சரி, மக்கள் நலப்பணியாளர்கள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டாலும் சரி, காலராவில் பேதி புடுங்கி எத்தனை பேர் மாண்டாலும் சரி.. ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் எதப்பற்றியும் அஞ்சாது, கண்டுகொள்ளாது நாம் நம் குறிகோளில் உறுதியாக இருக்க வேண்டும்.  

வாய் பேச்சு மட்டுமே பேச லாயக்கு ,போலி ப்ரொபைல்,முகரையை காட்ட வக்கில்லாதவர்கள், வரலாறு தெரியாத அரைகுறைகள், ஓட்டு இல்லாத பயலுக என உங்களைப் பற்றி எப்படிப்பட்ட  உண்மைகளை கூறினாலும் உங்கள் கவணத்தை சிதற விடாதீர்கள். உங்கள் எண்ணம் எப்போதுமே ஈழம்..ஈழம்..ஈழம் ஆகதான் இருக்க வேண்டும்.
எவனாவது எதிர்கருத்து ஸ்டேடஸ் போட்டால் அங்கேயே அவனுக்கு பதில் கொடுக்க கூடாது. அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து உங்கள் wallயில் போட்டு "இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா?" என ஒப்பாரி வைக்க வேண்டும். அப்போதுதான் "அநீதி கண்டால் கொதிப்பவர்" என நீங்கள் ஃபார்ம் ஆகலாம்.

இவ்வாறு பின்பற்றினால் நீங்கள் எவ்வளவு காலிப்பயலாக, களவாணிப்பயலாக, லுச்சாப் பயலாக இருந்தாலும் இணையத்தில் டமில் டேஸிய போராளி ஆகலாம்.







பின் குறிப்பு :- நீங்கள் தொடங்கும் பேக் ஐடி ஒரு பெண் பெயரில் இருந்தால் மிகவும் நன்று. கண்டிப்பாக ஜாஃப்னா யுனிவர்சிட்டி என்றும் போட வேண்டும். ரேட்டிங் எகிறும். அதிவிரைவில் உங்களுக்கு வீரத்தமிழச்சி, ஈழத்து இளவரசி போன்ற பட்டங்கள் உங்களை தேடி வரும்.!! லைக்குகள் ஆயிரக்கணக்கில் குவியும், அதற்கு கம்பனி காரண்டி!   

23 comments:

  1. Great! Highly Experienced Person in the Facebook with TIGERS AND TUMBLERS I think he is! Simply Superb

    ReplyDelete
  2. இருக்குற துண்டு கோவணத்தையும் இப்படி உருவிட்டீங்களே

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இருக்கு பாஸ்..

      Delete
  3. செருப்படி..... அப்படியே முகநூலில் பயணித்தது போல இருந்தது.... அருமையான கண்காணிப்பு.... இவனுக தொல்ல தாங்க முடியல....

    ReplyDelete
  4. அழகான அருமையான பதிவு......

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Replies
    1. பிரமாதம். மிகச் சிறப்பாக உங்களுக்கு அரசியல் நகைச்சுவை வருகிறது...

      Delete
  7. அட அட அட என்ன ஒரு நுணுக்கமான பார்வை , நான் வாசித்த இந்த பதிவுகாகவே எனக்கு இந்த நாள் இனிய நாள் ....

    ReplyDelete
  8. போட்டு தாக்கு நாளைல இருந்து நானும் டமில் போராளி...

    ReplyDelete
  9. நண்பரே நலமா?

    ///வாய் பேச்சு மட்டுமே பேச லாயக்கு ,போலி ப்ரொபைல்,முகரையை காட்ட வக்கில்லாதவர்கள், வரலாறு தெரியாத அரைகுறைகள், ஓட்டு இல்லாத பயலுக என உங்களைப் பற்றி எப்படிப்பட்ட உண்மைகளை கூறினாலும் உங்கள் கவணத்தை சிதற விடாதீர்கள். உங்கள் எண்ணம் எப்போதுமே ஈழம்..ஈழம்..ஈழம் ஆகதான் இருக்க வேண்டும்.
    எவனாவது எதிர்கருத்து ஸ்டேடஸ் போட்டால் அங்கேயே அவனுக்கு பதில் கொடுக்க கூடாது. அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து உங்கள் wallயில் போட்டு "இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா?" என ஒப்பாரி வைக்க வேண்டும். அப்போதுதான் "அநீதி கண்டால் கொதிப்பவர்" என நீங்கள் ஃபார்ம் ஆகலாம்.///

    ஆஹா ஆஹா என் ஐயப்பாடுகளை நீக்கும் அருமையான வரிகள் வழிகாட்டிய வழிகாட்டிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. பாராட்டி மட்டுதான் கமன்ட் போடனுமா ... ## டவுட்டு

    அப்புடியே திராவிட போராளி ஆவதற்கும் கருணாநிதி ஜெயலலிதா ஜால்ரா ஆவதற்கும் வழியை சொல்லுங்க பாஸ் ....

    உங்க பதிவில் சின்னி சின்ன திருத்தம் செஞ்சா திராவிட போராளி ஆகிபுடலாம் ... :D

    ReplyDelete
    Replies
    1. அதையாவது சொந்தமா எழுதுங்க பாஸ்.. அதையும் எடிட் தான் பன்னனுமா??

      Delete
  11. கலைஞர் ஆட்சியில் இவர்கள் வளர்ந்தார்கள்..கலைஞர் ஆட்சி போனதும் இவர்கள் ஒழிந்தார்கள். இப்போது டமில் டேசியம் பற்றி பேசக் கூட பயந்து கிளி ஜோசியம் பார்த்து கொண்டு இருக்கிறார்களோ என்னவோ.

    ReplyDelete