Sunday 5 August 2012

நண்பனை எதுவென்று சொல்ல?


தாய் அன்பும்,
தந்தை சொல்லும்,
சகோதர சொந்தமும்
ஒன்றாய் இருத்தல்
குடும்பமென்றார்கள்..
துவண்டபோது துணிவும்
தோல்விகளில் தோளும்
கொடுக்கும் பக்தி என்றார்கள்!
கோபத்தில் திட்டினாலும்
தந்தை என்போன் கனிவனென்றார்கள்;
நம்மைவிட நம்மை தெரிந்துவைத்திருப்பவள்
தாய் என்றார்கள்!
வெற்றிபெறும் நேரத்தில்
நம்மைவிட மகிழ்வோர்
இல்லத்தார் என்றார்கள்!

இவையனைத்தும் நண்பனிடம்
காணும் நான்
நண்பனை எதுவென்று சொல்ல?

அது இதுவெல்லாம் அவர் இவரென்றால்
அது இதுவென எல்லாமும்
நண்பனன்றோ!

நண்பனைத் தவிர
நல்லுறவு ஏதுமுண்டோ?

6 comments:

  1. அற்புதம் நண்பா .,,,,,

    ReplyDelete
  2. என் பிரெண்ட் போல யாரு மச்சான்..

    ReplyDelete
  3. சோகம் விட்டு, சொர்க்கம் தொட்டு, ராகம் இட்டு, தாளம் போட்டு பட்டு பாடும் வானம்பாடி நாம் தான...

    ReplyDelete
    Replies
    1. பாசம் வைக்க,நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை

      Delete