Sunday 22 July 2012

Batman : Dark Knight Rises: "சூப்பர் ஹீரோக்களின் ஹீரோ".!!





     
 சூப்பர் ஹீரோ படத்துக்கு ஆக்சன் மட்டுமே இல்லாமல் ஆழமும் புகுத்திய Christopher Nolanஇன் 'THE DARK KNIGHT RISES' அதன் முந்தைய பாகங்களுக்கு எந்த சேதமும் விளைவிக்காமல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது! பொதுவாகவே பேட்மன் திரைப்படங்களில் கதை, ஆக்சனைவிட அதிகமான எதிர்பார்ப்பு பேட்மானின் வில்லனுக்கே இருக்கும். ஏனெனில் பேட்மேன் காமிக்சை எடுத்துக்கொண்டால் தோண்டத் தோண்ட வில்லன்கள் தான் வருவார்கள். இரண்டாம் பாகமான DARK KNIGHTயில் நிகழ்ந்த ஹார்வி டென்ட் மரணத்திற்கு பொறுப்பேற்று தலை மறைவாகி எட்டு வருடங்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பும் பேட்மேனுக்கு, 'ஜோக்கரு'க்கு நிகரான வில்லனாக 'பேன்'(Bane) வாய்த்திருக்கிறாரா என்றால் கண்டிப்பாக இல்லை. ஜோக்கரின் எல்லையில்லா வில்லத்தனம், திட்டமின்றி செயல்படுவது என கொள்கையில்லா வில்லனாக இதில் 'பேன்' இல்லை. சராசரி சூப்பர்ஹீரோ படங்களில் வரும் வில்லன் போன்று பழிவாங்கும் எண்ணம், அழிவெண்ணம், முன்கதை என சகல சம்பிரதாயங்களுடன் Bane இருப்பதால் இந்த படத்தில் வில்லன் சற்று பலவீனமாக தோன்றுகிறார். மற்றபடி பேட்மன் படங்களுக்கே உரிய வில்லன் அறிமுகம், வசனம், ஆக்சன் காட்சிகள் அமர்க்களம். குறிப்பாக வில்லன் அறிமுகமாகும் விமான காட்சி அட்டகாசம்! ஜோக்கர் தன் Pshycoத்தனத்தால் பேட்மேனை தாக்கியதைவிட இதில் பென் உடல்ரீதியாக அதிகமாக தாக்கியிருக்கிறார். குறிப்பாக பாதாள உலகில் பேட்மேனுக்கும் Baneக்கும் நடக்கும் சண்டையில் சூப்பர் ஹீரோ யார் என்பதே தெரியாத அளவுக்கு வலிமை மிக்க வில்லனாக காட்சியளிக்கும் பென், இறுதிக்காட்சியில் அவர் வரலாறு  தெரியும் போது வலு இழந்து 'மொக்கை'யாகிறார்!

கடந்த பேட்மேன் படங்களை விட இதில் ஆக்சன் அதிகம். பேட்மேன், கமிஷனர் கோர்டான், வில்லன் பென் இவர்களுக்கு நிகராக Anne hathway, 'கேட் வுமன்' கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். பேட்மேனுடன் இணைந்து வரும் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் அட்டகாசம். மேலும் கமிஷனர் கார்டனாக வரும் Gary Oldman மற்றும் Lucius Foxஆக வரும் Morgan Freeman வழக்கம்போல் தங்கள் Characterக்கு வலு சேர்த்திருகின்றனர். 

ஹார்வி டென்ட் கொலையினால் ஏற்பட்ட மக்களின் எதிர்ப்புக்கும், கொலைவழக்கில் தேடிவரும் போலிஸ் டிபார்ட்மென்ட்டுக்கும் இடையே கோத்தம் சிட்டியை பென்னிடம் இருந்து  காக்க  களத்திற்கு திரும்பும் பேட்மான் Introduction செம.!! எட்டு வருடங்களாக வெளியுலக தொடர்பில்லாமல் இருக்கும் ப்ரூஸ் வேய்ன் ,தோற்றம்,செயல் அனைத்திலும் சோர்ந்து தெரிகிறார். பின் பேட்மேனாக திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்து களம் இறங்கும் காட்சி அற்புதம். பென்னிடம் பாதாளத்தில் நடக்கும் சண்டையில் சரமாரியாக அடி வாங்கி, பின் gotham சிட்டியை காக்க வேண்டும் என்ற துடிப்பில் மீண்டு வரும்போதும், இறுதி கட்ட போரில் தனக்கே உரிய பாணியில் எதிரிகளை கையாள்வதிலும் Batman returns. இதுவரை வந்த பேட்மேன் படங்களை விட இதில் பேட்மேனுக்கு அதிகமான ஹீரோயிச சீன்கள் இருக்கிறது. 

படத்தில் அடுத்த முக்கியமான பங்கு Hans Zimmerன் இசை. ஒவ்வொரு காட்சியிலும் நம் கண்களை விட காதுக்கு வேலை வைக்கிறார் ஹேன்ஸ் ஜிம்மர்! குறிப்பாக சிறையில் அடைப்பட்டிருக்கும் பேட்மான் வெளிய தப்பிக்க முயற்சி செய்யும் காட்சியின் பின் வரும் இசை உச்சக்கட்டம். 

  பொதுவாக சூப்பர் ஹீரோ குற்றவாளிகளை தண்டித்துவிட்டோ, கொன்றுவிட்டோ நகர்பவர்களாக இருக்கையில் பேட்மேனின் சட்டத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை அவரை சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோவாகவே நமக்கு காட்டுகிறது. 

இது Christopher Nolan's, Batman சீரிஸின் இறுதி பாகம். டார்க் நைட் படத்தில் இருந்த நல்லதுக்கும் தீமைக்குமிடையில் இருக்கும் தத்துவார்த்தமான கதைக்களம் இதில் இல்லையென்றாலும் இதைவிட அருமையான முடிவை இந்த பேட்மேன் சீரிஸ் பெற்றிருக்க முடியாது! நொலேன் நொலேன் தான்! 


    

8 comments:

  1. எனக்கு அந்த குழிக்குள் பேட்மேன் வெளியேறுவதற்காக உடற்பயிற்சி செய்யும் காட்சியை பார்க்கும் போது, சத்ரியன், சேதுபதி IPS போன்ற உன்னத காவியங்கள் நினைவுக்கு வந்தன.. என்ன இருந்தாலும் பில்லா அளவுக்கு இல்ல. பில்லா ஹாலிவுட் அளவுக்கு போகுதுன்னா, இந்த் ஹாலிவுட் ஆளுங்க பழைய பழிவாங்குற தமிழ் பட ஸ்டைலுக்கே வாராய்ங்க

    ReplyDelete
  2. @Ramkumar:

    யோவ் நீ இன்னும் அந்த பில்லாவ விட மாட்டியா... நாராயணா.. இந்த கொச அடிச்சி கொல்லுங்கடா...

    ReplyDelete
  3. @இளஞ்செழியன்:

    வாழ்த்துக்கள் தம்பி... நீ இதே போல பல நூறு பதிவுகளை எழுதிட அண்ணனின் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. @முத்துசிவா:

      மிக்க நன்றி அண்ணாத்த..!!

      Delete
  4. http://www.muthusiva.in/b/post-preview?token=1YVitDgBAAA.xXb9nsltiE-IgMge12pAPg.ZPsJbA8xEvV8DUyuOy8YiQ&postId=2134590180303847485&type=POST

    படத்தை பற்றிய என் தாழ்மையான கருத்து

    ReplyDelete
  5. Nanba sooper review ..,un pani thodara valthukall :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா..

      Delete