Friday, 26 April 2013

இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!


நானும் நண்பனும் நாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு ஜிகர்தண்டா கடைக்கு சென்றோம். எங்கள் அருகில் இரண்டு இளைஞர்களும், நம்மூரில் வசிக்கும் ஒரு வடநாட்டு குடும்பமும் ஜிகர்தண்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வடநாட்டு குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்தபின் அவர்களுடன் வந்த ஒரு சிறுமி காசு கொடுப்பதற்காக கடைகாரரிடம் வந்தாள். பின்,

கடைக்காரர்: தஸ்!

வட நாட்டு சிறுமி: "எவ்வளவு ஆச்சுன்ணா?"

கடைக்காரர் : "தஸ் ருப்யா" என்றார்

வடநாட்டு சிறுமி : "பத்து ரூபாயா" என்று சொல்லி அவரிடம் காசைக் கொடுத்து விட்டு சென்றாள்.

இதை பார்த்துக் கொண்டு இருந்த நானும் என் நண்பனும் ஒருவரை ஒருவர் பாத்து சிரித்து கொண்டோம். அதை கண்டுகொண்ட கடைக்காரர் அதை சமாளிப்பதற்காக, "பாருங்கப்பா இதெல்லாம் தமிழ்ல பேசுது, நாம தான் நம்ம தமிழையே கட்டிகிட்டு இந்தி தெரியாம இருக்கோம்" என்றார். உடனே,

நண்பன் : "ஏண்ணா அந்த பாப்பாவே தமிழ் புடிச்சு தான தமிழ்ல பேசுது, இதுல என்ன இருக்கு" என்றான்

பக்கத்திலிருந்த இளைஞர் : "ஆமான்ணே நம்ம ஆளுங்கதான் தமிழ் தமிழுனு வேற எதையும் நம்மள கத்துக்கவிடாம சீரழிச்சிட்டாய்ங்க. எல்லாம் இந்த திமுக காரய்ங்கள சொல்லனும்."

கடைக்காரர்: "ஆமா தம்பி, துபாய்ல எல்லாம் அரபிக்கு அப்புறம் இந்தி தான் பேசுவாய்ங்க. அங்கெல்லாம் நம்ம பசங்க போனா கஷ்டப்படுறாங்கள்ல"

நான்: "என்னன்ணா இதெல்லாம் ஒரு காரணமா? அப்படி பாத்தா சிங்கப்பூர், மலேசியால எல்லாம் தமிழ் அதிகமா பேசுறாங்க அதுக்காக இந்தியால இருக்க எல்லாத்தையும் தமிழ் கத்துக்க சொல்லுவீங்களா??"

கடைக்காரர்: அப்படி இல்ல தம்பி. இந்தி கத்துக்குறதுனால இவைங்களுக்கு என்ன பிரச்சனை?? ஏன் கத்துக்கவுடாம போராட்டம் பண்ணானுங்க?

இளைஞர்: "கரெக்ட்டுனா.. தேவையில்லாம இந்தி கத்துக்கவுடாம பண்ணி கருமம் தமிழ்நாட்ட விட்டு வெளிய எங்கேயும் போகவே முடியல.."

நான் (கடைகாரரிடம்) : "அண்ணே ஒரு உதாரணத்துக்கு சொல்றேன், உங்க கடையில ஜிகர்தண்டா 'பேமஸ்'ங்குறதுக்காக ரோட்ல போற வர்றவன எல்லாம் புடிச்சு உள்ள இழுத்து போட்டு ஜிகர்தண்டா குடிங்கடான்னு சொன்னா எப்படி?? எனக்கு புடிக்குது நான் குடிக்கிறேன். உங்களுக்கு புடிச்சா, தேவைனா இந்தி, தெலுங்கு, ஒரியா, அரபுனு எத வேணும்னாலும் கத்துக்க வேண்டியதுதான, அத யாரு தடுக்கப் போறாங்க? எதையுமே இன்னொருத்தன் மேல திணிச்சா அது தப்புதாண்ணா. அத எதிர்த்துதான் போராடுனாங்களேயொழிய உங்களை படிக்க வேண்டாம்னு யாரும் தடுக்கல! இப்ப வந்த இந்திப்பொணு கூட அவங்க ஊர்லயே தமிழ் கத்துக்கிட்டா இங்க வந்துச்சு? இங்க வந்துதானே கத்துருக்கு. அதுமாதிரி நம்மளும் அங்க போனா கத்துக்கப்போறோம். இதுக்குப் போயி மத்தவங்களை குறை சொல்லிட்டு......." 

கடைக்காரர் ஆமோதித்தவாறு தலையாட்டினார். அந்த இளைஞனோ பதில் எதும் சொல்லவில்லை. பின் காசைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டோம்.

ஜிகர்தண்டா கடைக்காரர் மட்டுமல்ல, என் எம்.பி.ஏ புரொபசர் ஒருத்தர் கூட " ஊருல உள்ளவாள எல்லாம் இவா இந்தி கத்துக்கக் கூடாதுனு போராடுவா, ஆனா அவா வீட்டு பிள்ளைகல மட்டும் இந்தி படிக்க அனுப்புவா" என்றார். ஆனா இவங்க மட்டுமல்ல இன்னைக்குவரைக்கும் பல பேர் அவங்க இந்தி கத்துக்க முடியாததற்கு காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டம்தான்னு  நெனச்சுகுறாங்க. அவங்க எல்லாத்துக்கும் கண்டிப்பா ஞாபகபடுத்த வேண்டியது என்னன்னா, நடந்தது வெறும் இந்தி எதிர்ப்பு போராட்டம் இல்ல இந்தி 'திணிப்பு' எதிர்ப்பு போராட்டம். இந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும் உண்மை புரிஞ்சிரும்.

பொதுவாவே மக்களுக்கு அவங்க தப்ப, குறையை, கையாளாகாத்தனத்த யார் மீதாவது சுமத்தி தப்பிச்சுக்குறது இயல்பு. அதே நிலைதான் இங்கேயும். இந்தி மொழியை கத்துக்காதது எதோ பாவச்செயல் போல நினைக்குறவங்க, இந்தியில் பேசுறத கவுரவமாக நினைக்குறவங்க தாரளமாக கத்துக்குங்க. அவங்கல யாரும் தடுக்கல. ஆனால் இவங்க சோம்பேறித்தனம் பட்டு கத்துக்காம, "நீங்க போராட்டம் பண்ணதுனாலதாம்பா என்னால இந்தி கத்துக்க முடியல, இல்லைன்னா இந்தி படத்த தியேட்டர்ல பாத்துருப்பேன், இந்தி பொண்ண லவ் பண்ணிருப்பேன், நார்த் இந்தியாவுக்கு சப்பாத்தி சுட போயிருப்பேன்'னு சொல்லுவதெல்லாம் சுத்த கையாளாகாத்தனம்.

ஆக கொஞ்சமாவது சுயமரியாதையோட சிந்திக்கிறவனுக்கு இந்த உண்மை புரியும். சும்மா கலைஞரப் புடிக்கல, திராவிட இயக்கத்த புடிக்காதவய்ங்க கிளப்பிவிடுற கதையை எல்லாம் நம்பி மூளையை அடகு வைக்காதீங்க. ஸ்கூல்ல நம்ம எல்லாரும் இங்கிலிஷ் படிக்கிறோம். நம்மளை கொண்டு போயி அமெரிக்காகாரன் கிட்ட இங்கிலிஷ் போட்டில பேச விட்டா நம்ம நிலமை என்ன ஆகும்? அதே மாதிரிதான் ஒருவேளை இந்தியை எல்லாருக்கும் கட்டாயமாக்கிட்டா எல்லா அரசு தேர்வும் இந்திலதான் இருக்கும். அப்புறம் இந்தியை தாய்மொழியா வச்சிருக்கவன் எல்லாம் சுலபமா பாஸ் பண்ணிட்டு போயிருவான். இந்தியை வெறும் மொழியா படிச்ச நமக்கு வழிச்சுட்டு போயிரும்! இது தேவையா???  

56 comments:

  1. அரசு செலவில் இந்தி படிப்பதை நிறுத்தவே போராட்டம் நடைபெற்றது.

    ReplyDelete
  2. அரசு செலவில் இந்தி படிப்பதை நிறுத்தவே போராட்டம் நடைபெற்றது.

    ReplyDelete
  3. பகுத் அச்சா போஸ்ட்.தன்யவாத்.

    ReplyDelete
  4. சும்மா நருகுன்னு இர்ருக்கு தலீவா!
    Thanks to @thedonashok for tweeting it!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அய்யா கேடி பில்லா.... கலக்கல் பதிவு.... நெத்தியடி... இந்த உண்மையை தெரியாதவன்தான் கத்துறான்.....

    ReplyDelete
  7. இவிங்கள யாரு இந்தி கத்துக்க வேணாம்னு சொன்னா... முள்ளு குத்திருச்சு, சட்டை சின்னதா ஆயிருச்சுன்னு சொல்ற மாதிரி.. இவிங்க சோம்பேறி தனத்துக்கு திமுகவையும், கலைஞரை யும் குறை சொல்லியே பழக்கமாயிருச்சு... ஏன் இந்தி பிரசார சபான்னு ஒன்னு இருந்துச்சே அங்க போய் கத்துக்க வேண்டியது தானே... அவா சொன்ன கதைகளை நம்பி... இவிங்க போடற ஆட்டம் இருக்கே..... எல்லாத்துக்கும் ஒரு இயக்கம் இருக்குறமாதிரி.. வரலாறு சொல்லி குடுக்க ஒரு இயக்கம் ஆரம்பிக்கணும் போல...

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு, நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, தேவையிருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த மொழியையாவது கற்றுக்கொள்ளட்டும் அது அவர்களது விருப்பம்.

    அன்று இந்தி மொழி திணிக்கப்பட்டிருந்தால் பல பிராந்திய மொழிகளைப்போல் தமிழும் காணாமல் போயிருக்கும்.

    ReplyDelete
  9. அருமையான பதிவு எத்தனை பேர் மண்டையில் ஏறுமோ

    ReplyDelete
  10. உண்மை நிலையை உள்ளபடி விளக்கும் பதிவு. எல்லா சிறப்பும் கொண்ட தமிழ் மொழியை அவர்கள் ஏற்கமாட்டார்கள் , செத்து சுண்ணாம்பாகி போன சமஸ்கிருதம் என்பதை பிடித்து கொண்டு தொங்கும் கூட்டத்தை என்னவென்று சொல்வது. தமிழில் கடவுளை கூப்பிட்டால் பிடிக்காதாம் ..சமஸ்கிருதம் வேண்டுமாம்..அப்போது தான் கடவுளுக்கு கேட்குமாம் .புளுகு மூட்டைகள் இப்படித்தான்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு

    ReplyDelete
  12. சூப்பர் இளா!

    ReplyDelete
  13. சூப்பர் இளா!

    ReplyDelete
  14. நல்ல பதிவு

    ReplyDelete
  15. நல்ல பதிவு

    ReplyDelete
  16. அரசு பள்ளிகளில் ஹிந்தி ஆசிரியர்கள் மூலம் ஹிந்தி மொழியை படிக்கும் வாய்ப்பை ஏழை மாணவர்கள் இழந்து விட்டார்கள்.1964 வரை இந்தி பாடத்தில் பாஸ் மார்க் வாங்காவிட்டால் பெயில்தான்.அதற்கு பயந்தாவது அந்த மொழியை மாணவர்கள் படித்திருப்பார்கள்.அந்த வாய்ப்பே மறுக்கப்பட்டது,ஞாயமா?அப்து அண்ணே, ஞாயமா பேசுங்க....ஆட்சி மொழி திணிப்பு எல்லாம் எதிர்க்கப்பட வேண்டியதே! ஆனால் ஏழை மாணவர்கள் பள்ளியிலேயே இலவசமாக படிக்கும் வாய்ப்பு போச்சே!!!ஹிந்தி பிரச்சார சபையிலே போய் படி...என்று சொல்லுவதெல்லாம்,அடாவடி.....நீங்களா இப்படி? இதெல்லாம் கட்சியை தாண்டி சிந்திக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பிழைப்பதற்காக வெளியூருக்கு செல்லும் போது நமக்கு தொடர்புகொள்ள வேறு மொழி இல்லை என்கிற நிலையில் ஹிந்தி மட்டுமில்லை உலகத்தில் உள்ள எவ்வளவு சிரமமான மொழியையும் 3 அல்லது 4 மாதங்களில் கற்றுக்கொள்ளலாம் உ.ம்.திருப்பூரில் பனியன் தொழில் செய்பவர்கள் பெரும்பான்மையனாவர்கள் 10 ஆம் வகுப்பை தாண்டாதவர்கள் தான் ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்வதில்லையா??? வட மாநிலங்களில் இருந்து வரும் கல்வியில் பெரும் தேர்ச்சி பெறாதவர்கள் தமிழகம் வந்து பிழைப்பதில்லையா???
      இதில் கட்சி என்ன இருக்கிறது ??? "அடிமையாகாதே" என்று யார் சொன்னால் என்ன??? வட இந்தியாவில் கட்டாயம் எல்லோரும் தமிழ் படிக்க வேண்டும் என்று சொன்னால் நிலமயை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் இந்தியாவே கலவர பூமியாகிவிடும்,,,,

      Delete
    2. பிழைப்பதற்காக வெளியூருக்கு செல்லும் போது நமக்கு தொடர்புகொள்ள வேறு மொழி இல்லை என்கிற நிலையில் ஹிந்தி மட்டுமில்லை உலகத்தில் உள்ள எவ்வளவு சிரமமான மொழியையும் 3 அல்லது 4 மாதங்களில் கற்றுக்கொள்ளலாம் உ.ம்.திருப்பூரில் பனியன் தொழில் செய்பவர்கள் பெரும்பான்மையனாவர்கள் 10 ஆம் வகுப்பை தாண்டாதவர்கள் தான் ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்வதில்லையா??? வட மாநிலங்களில் இருந்து வரும் கல்வியில் பெரும் தேர்ச்சி பெறாதவர்கள் தமிழகம் வந்து பிழைப்பதில்லையா???
      இதில் கட்சி என்ன இருக்கிறது ??? "அடிமையாகாதே" என்று யார் சொன்னால் என்ன??? வட இந்தியாவில் கட்டாயம் எல்லோரும் தமிழ் படிக்க வேண்டும் என்று சொன்னால் நிலமயை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் இந்தியாவே கலவர பூமியாகிவிடும்,,,,

      Delete
  17. நல்ல ஒன்று. மஞ்சள் நிறத்தில் எழுத்துக்களைத் தவிர்த்திருக்கலாம். படிப்பதற்கு சிரமமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. மாற்றியாகிவிட்டது..நன்றி

      Delete
  18. அரசு பள்ளிகளில் ஹிந்தி ஆசிரியர்கள் மூலம் ஹிந்தி மொழியை படிக்கும் வாய்ப்பை ஏழை மாணவர்கள் இழந்து விட்டார்கள்.1964 வரை இந்தி பாடத்தில் பாஸ் மார்க் வாங்காவிட்டால் பெயில்தான்.அதற்கு பயந்தாவது அந்த மொழியை மாணவர்கள் படித்திருப்பார்கள்.அந்த வாய்ப்பே மறுக்கப்பட்டது,ஞாயமா?அப்து அண்ணே, ஞாயமா பேசுங்க....ஆட்சி மொழி திணிப்பு எல்லாம் எதிர்க்கப்பட வேண்டியதே! ஆனால் ஏழை மாணவர்கள் பள்ளியிலேயே இலவசமாக படிக்கும் வாய்ப்பு போச்சே!!!ஹிந்தி பிரச்சார சபையிலே போய் படி...என்று சொல்லுவதெல்லாம்,அடாவடி.....நீங்களா இப்படி? இதெல்லாம் கட்சியை தாண்டி சிந்திக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அன்றைய சூழ்நிலையில் படிப்பையே நம்மவர்கள் முழுமையாக பெற முடியாத போது ஹிந்தியை திணிப்பதென்பது தவறான செயல். மேலும் நீங்கள் ஹிந்தி படிக்க விரும்பும் சிலருக்கான பிரச்சனையே கூறுகிறீர்கள் ஆனால் நீங்கள் கூறுவது போல் நாம் இந்தியை அனுமதித்திருந்தால் அது பிற்காலத்தில் இப்போது எவ்வளவு பெரிய பிரச்சனையாக ஆகியிருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். ஒரு அரசு அதன் மக்களுக்கு முதலில் கல்வியை அதன் தாய் மொழியில் வழங்கிவிட்டு பின் தான் உதிரிப் பாடத்திற்கு வழி செய்யவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

      Delete
  19. கலக்கல் தலைவரே ...

    ReplyDelete
  20. கலக்கல் தலைவரே ...

    ReplyDelete
  21. நல்ல பதிவு...
    இத தான் நண்பா.... ரொம்ப நாளா சொல்றேன்... ஒரு பயலுக்கும் காதுல ஏறல...

    ReplyDelete
  22. இன்று வேண்டுமானால் நாம் இந்தி படிக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம் !
    ஆனால் அன்று தமிழ் வழி பயின்றவர்களே 20 சதத்துக்கும் குறைவு !
    அந்த நிலையில் இந்தியை படிக்க சொன்னால் அது திணிப்பு தான் !
    அதனால் தான் ராஜாஜி உள்ளிட்ட பலரும் இந்தி திணிப்பை எதிர்த்தனர் !

    ReplyDelete
  23. இன்று வேண்டுமானால் நாம் இந்தி படிக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம் !
    ஆனால் அன்று தமிழ் வழி பயின்றவர்களே 20 சதத்துக்கும் குறைவு !
    அந்த நிலையில் இந்தியை படிக்க சொன்னால் அது திணிப்பு தான் !
    அதனால் தான் ராஜாஜி உள்ளிட்ட பலரும் இந்தி திணிப்பை எதிர்த்தனர் !

    ReplyDelete
  24. வணக்கம்.
    என்னுடைய கருத்து - இந்தி திணிப்பு பாராட்டப் பட வேண்டிய ஒன்றுதான். அதில் எனக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அது செய்யப்பட்ட முறை கேள்விக்குரியது.
    "உங்க கடையில ஜிகர்தண்டா 'பேமஸ்'ங்குறதுக்காக ரோட்ல போற வர்றவன எல்லாம் புடிச்சு உள்ள இழுத்து போட்டு ஜிகர்தண்டா குடிங்கடான்னு சொன்னா எப்படி?? எனக்கு புடிக்குது நான் குடிக்கிறேன்." >> உங்கள் கருத்து மிகச்சரி.

    உங்கள் வழியிலேயே சொல்கிறேன். "இது பொது இடம். நீங்கள் கொண்டு வரும் சாப்பாட்டுப் பொருட்களை இங்கு அமர்ந்து உண்ணலாம். எங்களிடம் ஜிகர்தண்டா 'பேமஸ்'. இது வேண்டுமானால் வாங்கிப் பருகுங்கள்" - this would have been more appropriate, so that many of the people of that age & us (hope, you as well) would have learnt Hindi as third language. Please feel free to comment.

    ReplyDelete
  25. நாம் இந்தி திணிப்பதைதான் அன்றும் இன்றும் என்றும் எதிர்க்கிறோம் இந்திபடிப்பதை அல்ல இதை பலரும் ப்ரிந்து கொள்ள மறுக்கின்றனர். எனது மொழி தமிழ்தான் ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் நான் எனது குழந்தைக்கு ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இந்தியைத்தான் கற்றுக் கொடுக்கிறோம் என் குழந்தை இந்தி படிக்கும் இடத்தில் படிப்பவர்கள் அனைவரும் தமிழர்களாகவே இருக்கின்றனர். எந்த மொழி நாம் வாழ்வத்ற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறதோ அதை கற்று கொள்வதில் தப்பே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. எந்த மொழி நாம் வாழ்வத்ற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறதோ அதை கற்று கொள்வதில் தப்பே இல்லை.//

      தப்பே இல்லை..தாய் மொழியை மறக்காமல் இருக்கும் வரை எதுவும் தப்பில்லை.. :)

      Delete
  26. வணக்கம்.
    என்னுடைய கருத்து - இந்தி திணிப்பு பாராட்டப் பட வேண்டிய ஒன்றுதான். அதில் எனக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அது செய்யப்பட்ட முறை கேள்விக்குரியது.
    "உங்க கடையில ஜிகர்தண்டா 'பேமஸ்'ங்குறதுக்காக ரோட்ல போற வர்றவன எல்லாம் புடிச்சு உள்ள இழுத்து போட்டு ஜிகர்தண்டா குடிங்கடான்னு சொன்னா எப்படி?? எனக்கு புடிக்குது நான் குடிக்கிறேன்." >> உங்கள் கருத்து மிகச்சரி.

    உங்கள் வழியிலேயே சொல்கிறேன். "இது பொது இடம். நீங்கள் கொண்டு வரும் சாப்பாட்டுப் பொருட்களை இங்கு அமர்ந்து உண்ணலாம். எங்களிடம் ஜிகர்தண்டா 'பேமஸ்'. இது வேண்டுமானால் வாங்கிப் பருகுங்கள்" - this would have been more appropriate, so that many of the people of that age & us (hope, you as well) would have learnt Hindi as third language. Please feel free to comment.

    ReplyDelete
  27. சிறப்பான பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete
  28. மிக அற்புதமான வரிகள் ,,,,மேலும் திமுகவினால் நாங்கள் ஹிந்தி படிப்பது தடுக்கப்பட்டது ,இல்லைனா நாங்கள் அப்படியே கிளிதிருப்போம்னு பல பேரு சொல்ல கேள்விபட்டிருப்போம் அந்த ஆட்கள் எல்லாம் ,10 வகுப்போ இல்ல 12 வகுப்போ படித்திருக்கும் ,,ஆனால் இங்கிலீஷ் தெரியாது ,,3ம் வகுப்பில் இருந்தே அப்பொழுது இங்கிலீஷ் பாடம் நடத்தப்படும் ,,,தமிழன் ஆழ்ந்து சிந்திக்க மாட்டணு ஹிந்தி காரனும் ,,அவனின் எடுபிடி தமிழனும் இப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு திரியுறான்

    ReplyDelete
  29. தானா விஷம் குடிச்சு சாகறது தற்கொலை,
    இன்னொருவர் விஷம் கொடுத்து,குடிச்சு சாகறது கொலை,.
    முன்னது: ஹிந்தி கற்றல்
    பின்னது: ஹிந்தி திணிப்பு
    # கொலையை அனுமதிக்கனுமா?
    # எப்படியும் குடிக்கிறதென்னவோ விஷம்தான்

    ReplyDelete
  30. சிறப்பான பதிவு..

    ReplyDelete
  31. நல்ல பதிவு !!

    ReplyDelete
  32. நல்ல பதிவு !!

    ReplyDelete