'ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சான்னு' SMS படத்துல சந்தானம் ஒரு டயலாக் சொல்லுவாரு.ஆனா ஒரு சில நேரத்துல எல்லாரோட ஃபீலிங்கும் ஒரே மாதிரி இருக்கும். அதுல முக்கியமானது அட்வைஸ் வாங்கும் போதும், நம்மகிட்ட சில கேள்விகள் கேக்கும் போதும்!
ஒரு மனுசன் பொறக்கறதுக்கு முன்னாடி அவன் அப்பன் ஆத்தாகிட்ட "என்னாப்பா.. பொண்ணா பையனா?"னு கேக்குறதுல தொடங்கி கடைசி காரியத்துல வந்து எரிக்கிறதா? பொதைக்கிறதா?ங்ற வரைக்கும் எல்லாரோட வாழ்க்கையிலையும் எத்தனையோ கேள்வி இருக்கு.
இந்த கேள்விங்கள்ல சிலது தவிர்க்க முடியாது எல்லாரும் எல்லாருகிட்டயும் கேக்குறதுதான். ஆனா சில பேரு இருக்காய்ங்க, ஒன்னு அந்தக் கேள்விய நம்ம கிட்ட கேக்கனும்னே வருவாய்ங்க, இல்ல நம்ம அதுக்கு சொல்ற பதில வச்சு நம்மல மட்டம் தட்டனும்னே நெனச்சே கேப்பானுங்க. இந்த மாதிரி சில கேரக்ட்டருங்களையும் அவனுங்க கேக்குற கேள்விகளையும் பத்தி தான் நாம பாக்கப் போறோம்.
குழந்தைப் பருவம் :
இந்த காலத்துல இவைங்க கேக்குற கேள்வி எதுவும் நம்மள டைரக்ட்டா பாதிக்காது ஆனா சுத்தி வளைச்சு நம்ம குடும்பத்துல குழப்பமும்,சண்டையையும் உண்டாக்கிரும். உதாரணத்துக்கு, குழந்தைய கையில வாங்கிட்டு சும்மா இருக்க மாட்டானுங்க, 'மூக்கு அம்மா மாதிரியே இருக்கு', 'காது அப்படியே அப்பன மாதிரியே இருக்கு', ஆனா கண்ணுதா..ன்'னு இழுப்பாய்ங்க. அந்த குழந்த முழுசா கண்ணக் கூட தொறந்துருக்காது, அதுக்குள்ள ஒரு குண்ட போட்ருவாய்ங்க.
அப்பா பக்கம் இருந்தோ, அம்மா பக்கம் இருந்தோ ஒரு சொந்தக்காரு கேப்பாரு, "ஆமா புள்ளைக்கு என்ன பேரு வைக்க போறிங்க, நம்ம ஐயா பேருதான??"னு. அது வரைக்கும் அப்படி ஒரு ஐடியாவே ரெண்டு பேருக்கும் இருக்காது, இந்தக் கேள்விக்கு அப்புறம் பேருக்காக ஒரு போரே நடக்கும்.
அப்புறம் அந்தக் குழந்த கொஞ்சம் வளந்தவுடன, கேக்குற கேள்வி, "என்னங்க ஒரு வயசாகியும் புள்ள இன்னுமா பேச ஆரம்பிக்கல, எங்க 'அபிஷேக்'கெல்லாம் (இவரு பெரிய அமிதாப் பச்சன். புள்ள பேரு அபிஷேக் பச்சன்னு வச்சிருக்காரு!!) பத்தே மாசத்துல பேச ஆரம்பிச்சுட்டான்!!".
"இன்னும் பேபிய ஸ்கூல்ல சேக்கலையா நீங்க? எப்ப சேக்க போறிங்க?? நாங்கெல்லாம் எங்க பாப்பாவ ரெண்டு வயசுலேயே ப்ரீ.கே.ஜி ல சேத்துட்டோம்.(ஏன் இதுக்கு பேசாம பொறந்தவுடனையே ஸ்கூல்ல தொட்டில் கட்டி தொங்க விட்ற வேண்டியதுதான.)
பள்ளிப் பருவம் :
இந்தப் பருவத்துல தான் இவனுங்க கேள்வியால நாம நேரடியா பாதிக்கப்படுறது. ஸ்கூல்ல சேந்துட்டாலும் சும்மா இருக்க மாட்டாய்ங்க "எந்த ஸ்கூலு?, ஐயைய..ஏன் அந்த ஸ்கூல்ல சேத்திங்க,அங்க கோச்சிங் சரியா இருக்காதே, நீங்க பையன இந்த ஸ்கூல்ல சேருங்க நல்லா ஸ்ட்ரிக்ட்டா இருக்கும்னு ஒரு உளைய வச்சிட்டு போவாய்ங்க.
ஒன்னாங்கிளாஸ்ல இருந்து ரேங்க் பத்தி கேக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. 5வது ரேங்க் எடுத்திருந்து வீட்ல விட்டுட்டாலும் வர்றவைய்ங்க சும்மா இருக்க மாட்டானுங்க, 5வது ரேங்க் தானா?? ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கனும்னு அட்வைஸ் போட ஆரம்பிச்சுருவாய்ங்க. இதுல தப்பி தவறி அவனுங்களுக்கும் நம்ம செட்ல ஒரு பையன் இருந்து அவன் கொஞ்சம் ரேங்க் அதிகமா எடுத்துட்டா அவ்வளவுதான். ஆட்டம் முடிஞ்சது.
கொஞ்சம் மேல் லெவல் போனவுடன இருக்கு உச்சக்கட்ட அவமானம்!! ஸ்டேட் போர்ட்டா, மெட்ரிக்கா??னு கேட்டு அதுக்கும் அவனுங்களே கருத்தும் சொல்லுவாய்ங்க. நம்ம ஸ்டேட் போர்டுனு சொன்னா "அய்யயே. மெட்ரிக் தான் நல்லது. அப்பதான் காம்படிசன்ல ஜெயிக்க முடியும்"ம்பாய்ங்க. நம்ம எதோ கிண்டி குதிர ரேஸ்ல ஓடப்போற மாதிரி. "மெட்ரிக்"னு சொல்லிட்டோம்னா, "ஸ்டேட் போர்டுலையே சேத்துவிடுங்க மெட்ரிகெல்லாம் இவனால படிக்க முடியாது கஷ்டமா இருக்கும்"ம்பாய்ங்க. இதையே அவனுங்க வீட்ல சொல்லமாட்டானுங்க, அடுத்தவங்க வீட்ல பேசுறதுக்குனே வச்சிருக்குற டயலாக் இதெல்லாம். முக்கியமா 9வது போறப்பவும், 11வது போறப்பவும் ஒரு திகில் போடுவாய்ங்க "அடுத்த வருஷம் பப்ளிக்கா ??ம்ம்ம்ம்ம்.. இப்ப இருந்தே படிக்க ஆரம்பிச்சிரனும் (டேய் பத்தாவதுக்கு ஒன்னாவதுல இருந்தாடா படிக்க முடியும்?) இல்லாட்டி அவ்வளவுதான்"னு திகில் போட்டே நல்லா படிக்கிற பசங்களையும் பரீட்சைய நெனச்சு பயப்பட வச்சிருவாய்ங்க. இதுல 10வது முடிச்சு 11வது போறப்போ இந்த குரூப் எடுக்குறப்போ இருக்கே ஒரு பிரச்சனை, அவனவன் அட்வைஸ் போடுவாய்ங்க. "தம்பி டாக்டராக போறிங்களா இல்ல இன்ஜினியர் ஆகப் போறிங்களா??னு" (இல்ல உன்ன கொன்னுட்டு கொலைகாரன் ஆகப்போறேன்) டீசண்டா ஆரம்பிச்சு, "இந்த குரூப் எடுக்க சொல்லுங்க அதுக்குதான் ஃபியூச்சர்ல வேல்யூ அதிகம்னு" வந்து கடைசில "உங்க பையனுக்கு அதெல்லாம் சரியா வராது பேசாம பாலிடெக்னிக்ல சேத்து விடுங்க அவனுக்கு அதான் லாயக்குனு" ரணகளமா முடிப்பாய்ங்க.
இது எல்லாத்தையும் சமாளிச்சு ஒரு குரூப் எடுத்து படிக்க ஆரம்பிச்சவுடன அடுத்த ஒரு பெரிய கண்டம் வரும், அதான் 12வது பப்ளிக் எக்ஸாம். 12வது போனவுடனையே கவுண்ட்டவுன (countdown) ஆரம்பிச்சிருவாய்ங்க, இன்னும் 6மாசம் தான் இருக்கு, இன்னும் 3மாசம் தான் இருக்குனு, விவேக்கிட்ட ஒரு படத்துல மனிதவெடிகுண்டு சொல்ற மாதிரி சொல்லிட்டே இருப்பாங்க. பரீட்சை நடந்துட்டு இருக்கும் போதே, "இன்னைக்கு question எப்படினு?" கேப்பாங்க, நாம கொஞ்சம் கஷ்டமா இருக்குனு சொன்னா, "என்னப்பா டிவில ஈசினு சொன்னாங்க நீ இப்படி சொல்றியே,(நான் டிவில நியூஸ் வாசிக்கிறப்ப வந்த கேளு நானும் ஈசினு சொல்றேன்) அடுத்த பரீட்சைக்காவது நல்லா படிச்சிட்டு போ'னு ஒரு அட்வைஸ் போடுவாய்ங்க. கடைசில ப்ரீட்சை முடிஞ்சவுடன அந்த லீவு கேப்லையும் சும்மா இருக்க மாட்டாய்ங்க, எப்ப ரிசல்ட்டு?? ரிசல்ட்டு என்னைக்கு வருதுனு நம்மலவிட அதிகமா அக்கறையா கேட்டுட்டே இருப்பாய்ங்க.அதோட இல்லாம லீவுனா சும்மா இருக்க கூடாதுப்பா, எதாவது கோச்சிங் கிளாஸ் போகனும்ப்பானுங்க. ஒரு வழியா ரிசல்ட்டும் வந்துரும், இது தான் பள்ளி பருவத்துல அல்டிமேட்டு. அது வரைக்கும் நாம பாத்திருகவே மாட்டோம், அப்படி ஒரு சொந்தக்காரங்க இருக்காங்கனே தெரியாது எவனெவனோ நியாபகமா(!!??) ஃபோன் பண்ணி மார்க் கேப்பாங்க. தெரிஞ்சவங்க தெரியாதவங்க அத்தன பேரும் மார்க் என்ன ஆச்சுனு கேக்குறதோட நிறுத்த மாட்டாய்ங்க, நம்ம மார்க்க கேட்டுட்டு அவனுங்களுக்கு தெரிஞ்ச நம்ம செட் பையனோ, பொண்ணோ மார்க் கூட கம்பேர் பண்ணி ஒரு கருத்து சொல்லுவாய்ங்க.
கல்லூரி காலம் :
இந்த +2 மார்க் வந்து கவுன்சிலிங் டேட் வர்றதுக்குள்ள ஆயிரம் பேரு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிருவாய்ங்க. இந்த காலேஜ் எடுங்க,அந்த காலேஜ் எடுங்க, அங்க தான் ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க, இந்த காலேஜ்ல பொண்ணுங்களும் பையனும் பாக்கவே முடியாதாம்னு ஒவ்வொரு காலேஜ் பத்தியும் மதன்'ஸ் திரைப்பார்வை மாதிரி விமர்சனம் கொடுப்பாங்க. இது போக எந்த க்ரூப் எடுத்தா 'ஸ்கோப்' இருக்கும்னு ஒரு கணிப்பு கணிச்சு சொல்லுவாய்ங்க. இதெல்லாம் கவுன்சிலிங் போறவங்களுக்கு தான், மேனேஜ்மெண்ட் சீட்டுனா இன்னும் கிழிஞ்சிரும். இதுக்குதான் அப்பவே சொன்னேன் நல்லா படின்னு, கேட்டியா படிச்சிருந்தா கவுன்சிலிங்ல நல்ல காலேஜ் கிடச்சிருக்கும்லன்னு நம்ம வீட்டுலையே மறந்த விஷயத்த மறுபடியும் தோண்டி எடுத்து மேல வச்சிட்டு போயிருவாய்ங்க. அப்புறம் காலேஜ் சேர்ந்ததுக்கு அப்புறம் வழக்கம் போல 'அரியர்' விசாரிப்பு, 'ஹாஸ்டல் அட்வைஸ்'னு சகலமும் நடக்கும்.
கடைசியா பைனல் இயர் வந்தவுடன திருப்பி ஃபார்முக்கு வந்துருவாங்க.(பெரும்பாலும் இஞ்சினியரிங்னா மூனாவது வருசத்துலையே ஆரம்பிச்சுருவாய்ங்க) எத்தன பர்செண்டேஜ்??, காலேஜ்க்கு என்னென்ன கம்பெனி வந்துச்சு??,இன்னுமா ப்ளேஸ் ஆகலன்னு??. ஒரு ஆளு அதுக்குள்ள 'எதுக்குப்பா வேலைக்கு போயிட்டு இன்னும் நெறையா படி'ன்னு சொல்லுவாரு, இன்னொருத்தரு 'இன்னும் என்ன படிக்கபோற வேலைக்கு போப்பா'ம்பாரு. பெரும்பாலும் இவங்க கேள்விக்கு பயந்தேதான் பல பேரு எதோ ஒரு கம்பெனி கால் லெட்டர் கெடச்சா போதும்னு ஒடிர்றாய்ங்க.
தப்பித்தவறி காலேஜ் முடிச்சு கொஞ்ச நாள் வீட்ல இருந்தோம்னா போதும். அவ்வளவுதான், சேகரு செத்துருவான்!! பக்கத்து வீட்டுக்காரன்ல இருந்து பல்லு போன ஆயா வரைக்கும் கேக்குற ஒரே கேள்வி, "தம்பி, நீங்க என்னதான் பண்றிங்க??". இந்தக் கேள்வி பெரும்பாலும் எல்லரோட வாழ்க்கையிலும் வந்திருக்கும். 'இந்த காரை நாம வச்சிருக்கோம் ஆனா இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கா'ங்ற மாதிரி இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!!
இதுக்கு பதிலும் மனசுக்குள்ள தல கவுண்டர் மாதிரி தான் தோனும் "அது ஏண்டா என்ன பாத்து அந்த கேள்விய கேட்டனு". வேலைக்கு போய்ட்டாலும் சும்மா இருபாங்னுங்கலா, 'அப்புறம்.. எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறிங்க'னு அடுத்த கட்டத்துக்கு போயிருவாய்ங்க. ( நீங்க ஒருவேளை ஓசிச் சோறு திங்கிறதுக்காக நான் கல்யாணம் பண்ண முடியுமாடா? இதெல்லாம் அநியாயமா இல்லையாடா?)
கல்யாணம் "கச்சேரி"
வீட்ல தப்பி தவறி கல்யாண பேச்ச எடுக்க ஆரம்பிச்சிட்டா மொதல்ல குஷி ஆகுறது இவனுங்கதான். ஆளாளுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுருவானுங்க.அட பாக்குறத எதாச்சும் நல்லதா பாப்பாய்ங்களானா அதுவும் இல்ல, குழியில தள்ளுறதுக்கு கல்ல செலக்ட் பண்ற மாதிரியே பண்ணுவாய்ங்க. இன்னும் சில பேரு இருப்பாய்ங்க ஐடியா கொடுக்குறோம்னு வந்து சொந்தத்துக்குள்ளயே பாருங்க, நம்ம சாதி சனத்துகுள்ளையே பாருங்க, டி.ராஜேந்தர் படத்த பாருங்கனு மொக்கையா உலை வச்சிட்டு போவாய்ங்க. ஒரு வேளை அந்த பையனோ/பொண்ணோ லவ் பண்றதா இருந்தா போச்சு, உண்மையிலையே இவனுங்க கச்சேரி களைகட்டிரும். நிச்சியதார்த்தத்துல உக்காந்துகிட்டு 'ஆமா பொண்ணுக்கு என்ன பண்ணப்போறிங்கனு' நைசா ஆரம்பிப்பாய்ங்க. அப்புறம் பத்திரிக்கைல ஆரம்பிச்சு பந்தி வரைக்கும் 'சிறப்பா' வேலைய பாத்துட்டு ஆசைப்படியே கல்யாண சாப்பாடு சாப்டுட்டு கிளம்பிருவாங்க.
கல்யாணம் முடிஞ்சும் இவைய்ங்க கச்சேரி முடியாது. வீட்டுக்கு வந்து அப்பப்போ எதாச்சும் அட்வைஸ் பண்னிட்டு போவாய்ங்க. வீட்ல அம்மாகிட்ட போயி 'என்ன, இன்னும் நீங்களே வேலை பாத்துகிட்டு இருக்கிங்க?? மருமவ என்ன பண்ணுது?"னு கொளுத்தி போடுவாய்ங்க. இதெல்லாம் விட கொடும கல்யாணம் ஆகி எப்படா மூனு மாசம் ஆகும்னு காத்துட்டு இருபானுங்க, கரெக்ட்டா வந்து அப்புறம் என்ன விசேஷம்னு கேட்டுட்டே வருவாய்ங்க. ஒருவழியா நமக்கு குழதையும் பொறந்திருச்சுனு வைங்க..
அப்புறம் என்ன.. இதுவரைக்கும் நம்மளைக் கேட்ட மாதிரியே இனிமே நம்ம குழந்தைகிட்டயும் மிஸ் ஆகாம எல்லா கருமத்தையும் கேப்பாய்ங்க.
இவ்ளோ கேள்வி கேக்குறிங்களே, உங்கள ஒரே ஒரு கேள்வி கேக்குறேன், உங்களுக்கெல்லாம் என்னதான்யா வேணும்..... வேணும்.... வேணும்...?
பிரமாதம்.. செம செம.. பின்னிட்டேள் நண்பா
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteஅகத்தியர் – காப்பு
ReplyDeleteபூரணமாய் நிறைந்த சற்குருவின் மலர் பாதத்தை போற்றியும் , யானை முகத்தோனைப் போற்றியும், வைத்திய ரத்தினச் சுருக்கம் 360 என்ற இந்நூலில் செந்துரம், பற்பம், லேகியம், தைலம், கிருதம், எண்ணெய், கலிக்கம், மாத்திரை மற்றும் நாடி பார்க்கும் வி
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
ReplyDeleteஅனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com
Good one Bro....sema comedy...
ReplyDeletethank u so much..!!
Deletesuperrrrrrrrr
ReplyDeletethank u boss..!!
Deletethank u boss..!!
ReplyDeleteஇதே மாதிரி கொளுத்திப் போடுறதயே வேளையா வச்சிக்கிட்டு எங்கூட்டுக்கு ஒரு 2 3 கேசு வரும். அதுங்க பேச்சக் கேட்டுட்டு எங்கப்பா என்னயத் திட்டுறாரு.
ReplyDeleteஹா.ஹா. same blood..!!
Deleteஅட்டகாசம் நண்பா :)
ReplyDeletePlease Remove Word verification from Comment Section.., :)
மிக்க நன்றி.. (removed)
Deleteதம்பி.:) ரொம்ப நொந்துருப்பே போல . இந்த கல்யாணத்தை பண்றக்குள்ள நான் சந்திச்ச மங்கூஸ் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும்!!
ReplyDeleteanandkumar D alias Siddhan Cbe :)
Deleteஆமாம் தலைவரே..!! :)
Deleteசூப்பர் இளா!!!
ReplyDeleteநன்றி அண்ணா..
Deleteஹாஹாஹா... செம :)
ReplyDelete"ஸ்டேட் போர்டுலையே சேத்துவிடுங்க மெட்ரிகெல்லாம் இவனால படிக்க முடியாது கஷ்டமா இருக்கும்"ம்பாய்ங்க. இதையே அவனுங்க வீட்ல சொல்லமாட்டானுங்க, அடுத்தவங்க வீட்ல பேசுறதுக்குனே வச்சிருக்குற டயலாக் இதெல்லாம். // sonna midhi vilum nu theriyum la
ReplyDeletesuper da thambi
ReplyDeletepinneetinga suberb
ReplyDeleteGood machi
ReplyDelete