2011 சட்ட்மன்ற தேர்தலுக்கு அப்புறம் ஆட்சி மாற்றம் ஆனது கூட தெரியாம தொடர்ந்து திமுகவையும் கலைஞரையுமே திட்டிட்டிகிட்டும் குறை சொல்லிகிட்டும் இருந்த இந்த முகநூல் கஜினிகளான நடுநிலைவாதிங்களோட சுயரூபம் பல் இளிக்க ஆரம்பிச்சிருச்சு. அதாவது இத்தன நாளா நடுநிலைங்குற போர்வையில "கஜினி பாய்ஸா" இருந்து திட்டிகிட்டு இருந்துவனுங்க எல்லாம் இப்ப "ஜிம் பாய்ஸா" மாறி முழு நேர தொழிலே அதிமுக ஜால்ராவுமாகவும், திமுக, கலைஞர் எதிர்ப்பையும் கையில எடுத்திருக்காய்ங்க.
இவனுங்களுக்கு வேலையே ஆளும் கட்சிக்கு ஆதரவா இருந்து ஜால்ரா அடிக்கிறதும், கூலிப்படை மாதிரி செயல்படுறதும் தான். அதாவது ரகுவரன், நாசர் மாதிரி பிரதான வில்லன்களா வராம பொன்னம்பலம், தளபதி தினேஷ் மாதிரி அடியாட்களா வர்றது தான் இவனுங்க பொழப்பே. திமுககாரன் அதிமுகவை பத்தி விமர்சிச்சா போதும், எப்படி முதலாளிய எவனாச்சும் எதிர்த்து பேசுனா முதலாளியயோட நாய் முந்திகிட்டு கடிக்கப் போகுமோ அது மாதிரி, அதிமுக காரன விட அதிக ரோசம் இவனுங்களுக்கு தான் பொத்துகிட்டு வரும். ஆனா இந்த ரோசத்தையும் கடமை உணர்ச்சியையும் ஆளும் கட்சிக்கும் அதோட ஜால்ரா கட்சிங்களுக்கும் தான் காட்டுவானுங்க. இவனுங்க பரப்புற அவதூறுக்கும், நக்கலுக்கும் நாம பதிலடி கொடுத்து அவனுங்க பேச முடியாம ஆயிருச்சுனா உடனே இந்த கஜினி தலையனுங்களா ஆகட்டும், தமிழ்தேசிய போலிகளாகட்டும் ஒரே பதில தான் சொல்லுவானுங்க "எங்க குடும்பமும் ஒரு காலத்துல பயங்கர திமுக தான். இப்பதான் மாறிட்டோம்."னு சொல்லுவாய்ங்க. இப்ப எய்ட்ஸ் வந்தவன் எல்லாம் ஒருகாலத்துல நல்லா இருந்தவந்தான்.. அதுக்காக?
இதெல்லாம் விடக் கொடுமை இவனுங்க பேசுற லாஜிக் இருக்கே பேரரசு படமே தோத்துரும். ஈழ விசயத்துல வைகோ, நெடுமாறனோட சுயநலத்த ஆதாரத்தோட சுப.வீ சொன்னாருன்னு எடுத்து சொன்னா, "அவரு கலைஞர் ஜால்ரா அப்படி தான் சொல்லுவாரு"ன்னு சொல்றானுங்க. ஏண்டா அப்போ உங்களுக்கு புள்ள பொறந்தவுடன தூக்கிட்டு வந்து காட்டுற நர்சு கூட உங்களுக்கு பிடிக்கலன அது உங்க புள்ள இல்லன்னு சொல்லிருவீங்களா?? என்னங்கடா உங்க நியாயம்?? எல்லாத்தையும் ஆதாரத்தோட, அந்த காலத்துல வந்த பேப்பர் செய்திகளோட புட்டுபுட்டு சொல்ற சுப.வீ கலைஞரோட ஜால்ராவா இல்ல ஒன்னுமே பண்ணாத ஜெயலலிதா ஆட்சிய போட்டி போட்டுகிட்டு பாராட்டுற சரத்குமார், தா.பாண்டி, சோனா சாமி, சூனா சாமி, வைகோ சாமி இவங்கெல்லாம் ஜால்ராவா??
திமுக ஆட்சியில எப்பவாது கலைஞர் எதாவது நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டத வச்சு இன்னைக்கு வரைக்கும் அவரு ஆட்சியில மானாட மயிலாட பாத்தாரு, மேட்சு பாத்தாருன்னு நக்கலடிக்கிறீங்களே இங்க ஒரு அம்மா ஆவூன்னா டூருக்குப் போறாங்களே அதப் பத்தி எவனாவது கேள்வி கேக்குறீங்களாடா? ஸ்கூல் பசங்களுக்கு கூட quarterly, half yearly லீவ் மட்டுந்தான். இந்தம்மாவுக்கு எப்பவுமே annual leaveஆல இருக்கு. கூடவே போயி பேனாவுல மை ஊத்தி கொடுத்த மாதிரி அங்கேயும் அலுவலக பணிகளை அம்மா பார்த்துக் கொண்டிருக்கிறார்னு சத்தமா மணி அடிக்கிறானுங்க சில பேரு.
அதவிட வேற கட்சியில இருந்து திமுகவுக்கு எவனாவது வந்தாலும் கலைஞர தான் திட்றானுங்க திமுகல இருந்து எவனாவது வெளிய போனாலும் கலைஞர தான் திட்றானுங்க ஆனா எதிர்க்கட்சியான தேமுதிகவை இப்ப பாதி பட்டா போட்டு வச்சிருக்கிற அதிமுகவையோ ஜெயலலிதாவையோ மட்டும் ஒருத்தனும் ஒன்னும் பேச மாட்டான் கேட்டா அது அரசியல் தந்திரம்னு சொல்லுவானுங்க. டேய் இதுக்கு பேசாம அதிமுகல உறுப்பினர் அட்டை வாங்கிட்டு போயி குனிஞ்சு நிக்கலாம்ல.
எனக்கு தெரிஞ்சே 15 வருசமா ஒரு வழக்கு நடந்துகிட்டு இருக்கு அதுல முக்கிய குற்றவாளியா, நூற்றுக்கணக்கா வாய்தா வாங்கி வாங்கி சொத்துக்குவிப்பு வழக்க வாய்தா குவிப்பு வழக்கா மாத்தி அந்த வழக்க விசாரிச்ச நீதிபதியே கடுப்பாகி வழக்குல இருந்து ஒதுங்குற அளவுக்கு டார்ச்சர் பண்ண ஒரு ஈழத்தாயை, காவிரித்தாயை பத்தி பேச வக்கு இல்லாத பயலுங்களும், பத்திரிக்கைகளிலும், ஊடகங்களும் 85 வயதான உடல்நிலை சரியில்லாத, வெறும் அரசு சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ள தயாளு அம்மாவை கலைஞர் மனைவி என்ற ஒரே காரணத்துக்காக அட்டை படத்தில் போட்டு நக்கல் பண்ண மட்டும் தைரியம் எல்லா ஓட்டை வழியாகவும் பொங்குதே.... உங்களுக்கெல்லாம் கொஞ்சமாச்சும் வெக்கம், மானம் இருக்காடா?..அது சரி இரட்டை இலைய பறக்கும் குதிரை இறக்கைன்னு சொன்னா ஆமா போடுற கோஷ்டிங்க கிட்ட எப்படி இதெல்லாம் எதிர்பார்க்க முடியும்.
கடைசியா ஒன்னு, அது என்னங்கடா கலைஞர பத்தி எழுதும் போது மட்டும் கருணா, கருநாகம், துரோகி, அவன், இவன்னு இன்னும் என்னென்னமோ அசிங்கமா எழுதுறீங்க ஜெயலலிதாவ விமர்சிக்க மட்டும் ரொம்ப போனா பெண்மனி, அந்தம்மா, அது, இதுன்னு மட்டும் எழுதுறீங்க. கலைஞர திட்டுனா எந்த பாதிப்பும் இல்ல ஒன்னும் பண்ணமாட்டார்ன்னு தைரியம். ஜெயலலிதாவ திட்டுனா என்னவாகும்னு மனசுல பயம் இருக்குல. தைரியமா தங்கள் நிலையை அடையாளம் காட்டிக்கொள்ளாதவன் தான் நடுநிலை போர்வையோட ராப்பிச்சைக்காரன் மாதிரி சுத்துவான்.அதுக்காக திமுக பண்றது எல்லாம் சரி அதுனால அவங்கள மட்டும் தான் ஆதரிக்கனும்னு சொல்லல, திமுகவை விமர்சிக்கிறதுல பத்து விழுக்காடாவது ஆளும் கட்சியை விமர்சிக்க தைரியம் இருக்கான்னுதான் கேக்குறேன். இருந்தா கேளுங்க. இல்லெனா... மூடிட்டு........
முகநூல் கஜினிகள் : http://kedibilla.blogspot.in/2012/09/blog-post_13.html
நக்கல், நையாண்டி, குத்தல் குறும்பு என்று சர்வசாதாரணமாய்- சொல்லவந்த விஷயத்தை இயல்பாகச் சொல்லிச்செல்லும் மொழிநடை உங்களுக்கு அருமையாய் வருகிறது வாழ்த்துக்கள்.
ReplyDeleteகேடி பதிவு...கில்லாடி நக்கலு.
ReplyDeleteகேடி பதிவு....கில்லாடி நக்கலு
ReplyDeleteஅருமை
ReplyDelete